Free Tamil Astrology and numerology service .Various Religious thoughts,belief and their truth will be revealed ,proving the famous saying everyone are worshipping the same god in various forms.True spiritual knowledge will be provided.The origin and science behind astrology will be revealed.The various practices followed by siddhas and the great people will be brought before you.
Tuesday, 30 December 2014
Sunday, 28 December 2014
Sani Peyarchi Palangal 2014-2017
சனிப்பெயர்ச்சிப் பலன்கள்! 2014-2017
குரு பகவானின் நட்சத்திரமான விசாக நட்சத்திரத்தில் சனி அமரப்போவதால், அசுபத்தை விட சுபமே நடக்கும். பொதுவாக ஜென்ம சனி, ஏழரை சனி, அஷ்டம சனி, அர்தாஷ்டம சனி உள்ளவர்கள் அதாவது மேஷ இராசி, சிம்ம இராசி, துலா இராசி, விருச்சிக இராசி, தனுசு இராசி ஆகிய இராசிகளில் பிறந்தவர்களுக்கு, இந்த சனி பெயர்ச்சியால் நேரம் சாதகமாக இல்லை என்று கூறுவார்கள். அதை கேட்டு கவலைப்பட வேண்டாம், பயம் வேண்டாம். ஏன் என்றால், சனி அமர்வது குருவின் சாரத்தில். இதனால் துன்பத்தை விட இன்பத்தையே
கொடுக்கும்
கொடுக்கும்
ஜோதிடத்தின் வரலாறு
ஜோதிடத்தின் வரலாறு கடவுளின் படைப்புக் காலத்திலிருந்தே தொடங்குகிறது. கார்க முனிவர், ஜோதிடவியல் படிப்புக் கடவுளாலேயே எடுத்துரைக்கப் பெற்றது என்றும் பிரம்மன் அதைப் படைத்த போதே தமக்கு அருளியதாகவும் கூறுகிறார். கார்க முனிவரிடமிருந்து மற்றைய முனிவர்கள் கற்று உலகம் எங்கும் பரப்பினார்கள். ஜோதிடம் உலகம் தோன்றிய போதே தோன்றியதாகத் தெரிகிறது.
மேலை நாடுகளில் (கிமு 3769ல்) சேத் என்பவர் உலகத்தின் முதல் ஜோதிடம் என்ற நம்பிக்கை உள்ளது. அராபியர், எகிப்தியர் , யாதா, பாரசீக ஜோதிடர்கள் எழுதிய ஜோதிட நூல்களில் இருந்து இது அறியப்படுகிறது. கிரகங்களின் கற்றும் வழியையும் அவைகளின் வேகத்தையும் சேத் என்பவர் முதல் முதலில் ஆராய்ந்து அறிந்தார் என்று மேலை நாட்டினர்
நம்புகிறார்கள். விண்ணில் கிரகங்கள் செல்லும் விதியை 12 சரிசம பாகமாக அவர் தாம் பிரித்தார், ஏனெனில் சூரியன் விண் வெளியில்ஒரே பாதையில் ஆண்டு முழுவதும் செல்கிறது என்று அவர்கண்டார். மேலும் சூரியனின் வட்ட பாதை ஆண்டு பனிரெண்டு பௌர்ணமிகளை கொண்டதாகக் கண்டார். பௌர்ணமி 1 மாதத்திற்கு ஒரு முறை நிகழ்கிறது. ஆகவே சூரியன் செல்லும் பாதை பன்னிரண்டு சம பாகங்களாகப் பிரிக்கப்பட்டது. இவைகளுக்குப் பெயர் மஸ்ஸரோத் என்பது, நம்மால் இராசி அல்லது சூரியன் மாளிகை என்றழைக்கப்படுகிறது.
Saturday, 27 December 2014
Subscribe to:
Posts (Atom)