Saturday, 10 January 2015

திருமணம்--ஜாதகப் பொருத்தம்


                    திருமணத்துக்கு ஜாதகப் பொருத்தம் அவசியம்தானா?




              தாய் – தந்தை வேறு, பழக்கவழக்கங்கள் வேறு, செயல்பாடுகள், எண்ணம், கலாசாரம் எல்லாமே வேறு. இத்தனை வேறுபாடுகளோடு கூடிய ஆணும், பெண்ணும் கல்யாணம் செய்து கொள்வது என்று வருகிறபோது, அது சரியானபடி வருமா? இத்தனை வேறுபாடுகளையும் மீறி தம்பதிகளின் வாழ்கை கடைசிவரை முழு அமைதியோடும் அமையுமா? இதையெல்லாம் அளக்க விஞ்ஞானத்தில் எந்த ஒரு கருவியும் கிடையாது. அதனால் நீங்கள் நம்மூர் சிந்தனைக்குத்தான் வரவேண்டும். ஜாதகம் அதற்குப் பயன்படும்.
             எப்படி என்று கேட்கிறீர்களா? உங்களுக்கு என்ன தேவை? வாழ்கையில் மகிழ்ச்சி தேவை. அந்த மகிழ்ச்சியை கொடுப்பது மனசு. அந்த மனம் உங்கள் இருவருக்கும் இருக்கிறது. அந்த மனசு ஒருத்தருக்கொருத்தர் விடுக்கொடுக்கிற மாதிரி இருக்கிறதா? ஒரு இடையூறு வரும் சந்தர்ப்பத்தில் நீக்குப்போக்காகச் செயல்படும். நடைமுறை இருவர் மனதிலும் இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.
              மனம்தான் இரண்டு. ஆனால், செயல்பாடு ஒன்றாக இருக்கவேண்டும். அப்படி அமைந்தால்தான் வாழ்கையில் எந்தவிதமான பதற்றமும் இல்லாமல் நன்மைகளை எட்ட முடியும். இந்தமாதிரி இருக்கிறதா என்று சொல்வதற்குத்தான் ஜாதகப் பொருத்தம் பார்க்கிறார்கள். அது உங்களுக்கு வேண்டுமா? வேண்டாமா? என்பதைத் தீர்மானித்துக் கொள்வது உங்கள் விருப்பம்.
             திருமணத்தின் போது ஆண், பெண் இருவருக்கும் அவர்கள் பிறந்த நட்சத்திரம், ராசி போன்றவைகளைக் கொண்டு பன்னிரண்டு வகையான பொருத்தங்கள் பார்க்கப்படுகிறது. இவற்றில் குறிப்பிட்ட பொருத்தங்கள் இருந்தால் மட்டுமே திருமணம் செய்து வைக்கப்படுகிறது. இல்லையென்றால் ஜாதகப் பொருத்தமில்லை என்று அந்தத் திருமணம் தவிர்க்கப்படுகிறது. 
             சில பொருத்தங்கள் இல்லை என்றாகிவிடும். மிக முக்கியமாக இருக்க வேண்டிய பொருத்தங்கள் ஐந்து. 
அவை :
  • தினப்பொருத்தம்
  • கனபோருத்தம்
  • யோனிப்போருத்தம்
  • ராசிப்போருத்தம்
  • ரஜ்ஜிப்பொருத்தம்
இவை அவசியம் இருக்க வேண்டும். இதில் மிக மிக முக்கியமாக தவிர்க்க இயலாத – தவிர்க்கக் கூடாத பொருத்தமான இரண்டு உண்டு.

ஒன்று யோனிப்போருத்தம் மற்றொன்று ராஜ்ஜிப் பொருத்தம். இந்த இரண்டில் எந்தப் பொருத்தம் ஒன்று இல்லையாயினும் மணமுடிக்கக் கூடாது.

எனவே இவை இரண்டு பொருத்தமும் வாழ்விற்கு உயிர்நாடியாக இருக்கும் பொருத்தம் ஆகும்.  



No comments:

Post a Comment