Saturday, 13 June 2015

குரு பெயர்ச்சி பலன்கள் 2015-2016





                                               நிகழும் மன்மத வருடம் ஆனி மாதம் 21ம் தேதி (06-07-2015) திங்கள்கிழமை அன்று அருள்மிகு குரு பகவான் கடக இராசியிலிருந்து சிம்ம ராசிக்கு பிரேவசிக்கிறார்.சிம்மத்தில் உள்ள குரு(5,7,9) தனுசு,கும்பம் மற்றும் மேஷம் ஆகிய ராசிகளை பார்வையிடுகிறார் .குரு பார்வை கோடி நன்மை என்பதற்கேற்ப  அவர் பார்வை பதியும் ராசிகளான தனுசு ,கும்பம் மற்றும் மேஷம் ஆகிய ராசிகள் உன்னதமான பலன்களை பெரும் .மற்றவர்கள் பரிகாரம் செய்வதன் மூலம் உன்னதமான பலன்களை பெறுவர் .கீழ்க்கண்ட நேயர்கள் தங்கள் ஜென்ம ராசிக்கு பரிகாரம் செய்வது உத்தமம் .

ரிஷபம்  , மிதுனம்  ,  சிம்மம்  ,  கன்னி  ,  விருச்சிகம்   ,  மகரம்   ,  மீனம் 

இந்த பலன்கள் யாவும் கோச்சார ரீதியான பலன்களே உங்கள் சுய ஜாதக அடிப்படையில் இப்பலன்கள் மாறும் .ஆகவே உங்கள் சுய ஜாதக பலன்களையும் இந்த பலன்களுடன் ஒப்பிட்டு கொள்வது நல்லது .
12 ராசிகளுக்கான பலன்கள் பின்வருமாறு :​-


சிம்மத்தில் சஞ்சரிக்கும் குரு மகம் ,பூரம் மற்றும் உத்திரம் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறார் .அதன் கால நிலைகள் வருமாறு :-
                                                
                                மகம்            ---     செப்டம்பர் -14 வரை 

                                பூரம்             ---     செப்டம்பர் -15 முதல்  நவம்பர் -28 வரை 
                                                                             பிப்ரவரி -18,2016 முதல் ஜூலை -24,2016                                                                                    வரை       

                                உத்திரம்     ---      நவம்பர் -29 முதல் பிப்ரவரி -17,2016                                                                                           வரை , ஜூலை -25 ,2016 முதல் 
                                                                               



மேஷம்:  

"ஐந்தினில் குருதான் வந்தால் அனைத்திலும் வெற்றி கிட்டும் !
பைதனில்  பணமும்  சேரும்!பாராளும் யோகம் வாய்க்கும் !
வையகம் போற்றும் வண்ணம் வாழ்க்கையும் அமையும் உண்மை !செய்தொழில் வளர்ச்சி யாகும் !செல்வாக்கும் அதிகரிக்கும் !" 


என்கிறது ஜோதிடம் .

ஜூலை 6 முதல்  ஐந்தினில் சஞ்சரிக்கும் குரு உங்கள் ராசி ,9 மற்றும் 11 ஆகிய ஸ்தானங்களை பார்வையிடுகிறார் .ஆகவே தெய்விக சிந்தனை மேலோங்கும் ,தந்தை வழி உறவு மேலோங்கும் ,இதுவரை தாமதம் ஆகிய செயல்கள் நிறைவேறும் .நண்பர்கள் மூலம் அனுகூலம்  கிட்டும் .தமது மனதில் எழும் தர்ம சிந்தனைகள் நிறைவேறும் .குரு தமது ராசிக்கு 9,12க்குரியவர் அவர் 5ல் சஞ்சரிக்கும் பொது உன்னதமான பலன்களைத்  தருவார் .ஆகவே பிள்ளைகளின் மூலம் சுப விரயம் ஏற்படும் .நீண்ட நாள் நிகழாத பிள்ளைகளின் திருமணம் நிறைவேறும் . உங்கள் ராசிக்கு அஷ்டமத்தில் சஞ்சரித்து சங்கடங்கள் மன வேதனைகள் மற்றும் அலைச்சல் தரும் சனி பகவானின் தாக்கத்தை இந்த குரு பெயர்ச்சி சற்று போக்கும் .தாங்கள் சந்திராஷ்டம  காலத்தில் சற்று கவனத்துடன் இருப்பது நல்லது .ஏனெனில் 8ல் உள்ள சனியால் அலுவலகத்தில் சற்று சுமை கூடும் ஆகவே அதன் தாக்கத்தால் வீட்டில் சண்டை சச்சருவுகள் சந்திராஷ்டம காலத்தில் ஏற்பட கூடும் .ஆகவே அக்காலத்தில் விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது .பகவான் அனுமானை சனீஸ்வரனால் ஏற்படும் சங்கடம் தீர  வேண்டுங்கள்.

குரு  கேதுவின் சாரத்தில் சஞ்சரிக்கிறார் ஆகவே சுப விரயங்கள் ஏற்படும் காலமிது .அன்மீக  பயணங்கள் செல்ல ஏற்ற காலமிது .செப்டம்பரில் குரு சூர்யன் சேர்க்கை 5ல் ஏற்படுவதால் அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் துணை நிற்கும் . பிள்ளைகள் வழியில் நற்பலன்கள் கிட்டும் .அக்டோபர் முதல் சுக்கிரன் சாரத்தில் குரு சஞ்சரிப்பார் தந்தை வழி உறவு மேலோங்கும் .வியாபாரத்தில் வெற்றி மற்றும் லாபம் குவியும் .இருந்தாலும் சிறு சச்சரவுகள் குடும்பத்தில் இருக்கும் .குரு சூர்யன் சாரத்தில் சஞ்சரிக்கும் போது உங்கள் கீர்த்தி மற்றும் புகழ் பெருகும் .மேலும் உங்கள் சுய  ஜாதகத்தில் குரு இருக்கும் நிலை அறிந்து அதற்குரிய பரிகாரங்களை செய்யுங்கள்  நன்மையை தரும்  .

உன்னதமான வாழ்வை பெற அனுமன் மற்றும் சிவ வழிபாட்டை மேற்கொள்ளுங்கள் .


ரிஷபம் :

"மன்னவன் நான்கில் நிற்க மலைபோல துயர் வந்தாலும் கண் எதிரில் பனியாய் மாறும் கல்வியால் வளர்ச்சி கூடும் முன்னாளில் இருந்த நோய்கள் முற்றிலும் விலகி ஓடும் பொன்னான ஒப்பந்தங்கள் போற்றும் விதம் வந்து சேரும் "

என்கிறது ஜோதிடம் . 

இது வரை 3லிருந்த குரு ஜூலை 6 முதல் நான்கில் சஞ்சரிக்கப்  போகிறார் .4க்கு வரும் குரு உங்கள் ஜென்ம ராசிக்கு 8,10 மற்றும் 12 ஆகிய ஸ்தானங்களை பார்வையிடுகிறார் .குரு உங்கள் ராசிக்கு 8 மற்றும் 11க்குரியவர் ஆவார் .ஆகவே அவர் பார்வை 8,10 மற்றும் 12ல் படுவதால் அலைச்சல் குறையும் .பிதுர்ஜித் சொத்துகள் ,உயில்கள் ,இன்சூரன்ஸ் ,கிராட்டுவிட்டி ஆகியவை கிட்டும் .அலுவலகத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும் .வியாபாரம் விருத்தி அடையும் . அரசியல்வாதிகளுக்கு முன்னேற்றம் ஏற்படும் .ரியல் எஸ்டேட் மற்றும் வாகனத் தொழிலில் உள்ளவர்க்கு நன்மையே கிட்டும் .கடன் பிரச்சனைகள்  தீரும் .மறைமுக எதிரிகள் மறைவர் .சனியும் சாதகமான இடத்தில சஞ்சரிப்பதால் நன்மையே ஏற்படும் .

குரு கேதுவின் சாரத்தில் சஞ்சரிக்கும் போது வீட்டிற்கு வரவேண்டிய வருமானங்கள் சிறிது தாமதமாய் வரும் .மூத்தசகோதர உறவில் சிறிது பிரச்சனைகள் இருக்கும் .குரு சுக்கிரன் சாரத்தில்  சஞ்சரிக்கும் போது உங்களுக்கு நன்மையே ஏற்படும்.ஆனாலும் சுக்கிரன் நிலையை பொருத்து உங்கள் வீட்டில் உங்களின் சில செயல்களுக்கு எதிர்ப்பு வலுக்கும் .முக்கியமான முடிவுகளை வீட்டில் உள்ளவருடன் கலந்து ஆலோசித்து எடுப்பது நன்று .குரு சூரியன் சாரத்தில் இருக்கும் போது உங்களுக்கு புது மனை கட்டவோ அல்லது வாகனம் வாங்கவோ வாய்ப்பு வரும் .வீட்டில் மகிழ்ச்சி கூடும் . உங்கள் சுய  ஜாதகத்தில் குரு இருக்கும் நிலை அறிந்து அதற்குரிய பரிகாரங்களை செய்யுங்கள் நன்மையை தரும் .

பெருமாளை வழிபடுவது உங்களுக்கு நன்மையை தரும் .


மிதுனம் :

"தீதிலாதொரு மூன்றில் துர்யோதனன் படை மாண்டது " என்பது பழமொழி .

இதுவரை இரண்டில் சஞ்சரித்து அற்புதமான பலன்களை தந்த குரு ஜூலை 6 முதல் 3ல் சஞ்சரிக்கிறார் .3ல் உள்ள குரு உங்கள் ஜென்ம ராசியிலிருந்து 7,9 மற்றும் 11 ஆகிய இடங்களை பார்வையிடுகிறார் .குரு 7ம் இடத்தை பார்ப்பதால் கணவன் மனைவியிரிடையே ஒற்றுமை கூடும்.திருமணம் கைகூடும் .வியாபாரம் மற்றும் தொழில் நன்றாக அமையும் .தந்தை வழி உறவு நன்மையை தரும் .பூர்வீக சொத்துகள் கைக்கு வரும் .தர்ம சிந்தனை மேலோங்கும் .ஆன்மிக எண்ணங்கள் வளரும் .சகோதரருடன் நல்லுறவு ஏற்படும்.தன்னம்பிக்கை கூடும் .நண்பர்கள் உதவி தக்க சமயத்தில் கிட்டும் .செய்யும் காரியங்களில் வெற்றி கிட்டும் .6ல் உள்ள சனியால் பகைவர் கூடுவர் .உடல் நலத்தில் சிறிது கவனம் தேவை .சனியால் ஏற்படும் இன்னல்கள் தீர விநாயகனை வழிபடுங்கள் நன்மை கிட்டும் .

குரு கேது சாரத்தில் சஞ்சரிக்கும் போது அலுவழகத்தில் உள்ளவர்க்கு சிறு பிரச்சனைகள் இருக்கும்.வியாபாரத்திலும் அத்தகைய நிலையே இருக்கும் .சுக்கிரன் சாரத்தில் சஞ்சரிப்பது உங்களுக்கு நன்மையே தரும் .சுப விரயங்கள் இருக்கும் .பிள்ளைகள் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும் .சூரியன் சாரத்தில் இருக்கும் போது உங்களுக்கு தன்னம்பிக்கை கூடும் .வீடு மாற்றம் ஏற்படலாம் .சிறு பயணங்களும் மேற்கொள்ள நேரிடும் .உங்கள் சுய  ஜாதகத்தில் குரு இருக்கும் நிலை அறிந்து அதற்குரிய பரிகாரங்களை செய்யுங்கள் நன்மையை தரும் .

வாழ்வில் சிறப்பினை பெற வெள்ளி தோறும் அம்மனை வழிபட்டு வாருங்கள்.

கடகம் :

"இரண்டிலே குருதான் வந்தால் இல்லத்தில் மகிழ்ச்சி கூடும் !ஆறினை குருதான் பார்த்தல் அடைந்திடும் கடன்கள் யாவும் !எட்டினை குருதான் பார்த்தால் இருந்த நோய் மறைந்து போகும் !பத்தினை குருதான் பார்த்தால் பாரினில் தொழில் வளம் பெருகும் !"

இதுவரை ஜென்ம ராசியில் இருந்த குரு பகவான் ஜூலை 6 முதல் இரண்டினில் சஞ்சரித்து அமோக பலன்களை தருவார் .தனகாரகன் குரு இரண்டினில் சஞ்சரிப்பது நன்று ஆகும் .குரு பெயர்ச்சியால் உங்கள் இல்லத்தில் மகிழ்ச்சி கூடும் .2ல் உள்ள குருவின் பார்வை 6,8 மற்றும் 10
ஆகிய இடத்தில் பதிகின்றது .குரு ஆறினை பார்ப்பதால் கடன்கள் யாவும் அடையும் ,இருந்த நோய் அனைத்தும் இருந்த இடம் தெரியாமல் மறையும் .எட்டினை குரு பார்ப்பதால் உங்கள் பெயருக்கு ஏற்பட்டிருந்த அவச்சொல் யாவும் நீங்கும் .மனைவி வழி உறவு நன்மையைத்  தரும் .பத்தை குரு பார்ப்பதால் உத்தியோகம் சிறக்கும் ,தொழில் வளம் பெருகும் ,நன்மைகள் யாவும் தரும் .சனியும் சாதகமான இடத்தில இருப்பதால் நன்மைகள் யாவும் பெருகும் .

குரு கேதுவின் சாரத்தில் சஞ்சரிக்கும் போது தந்தை வழி உறவில் சிறு சச்சருவுகள் ஏற்படும் .ஆனாலும் தெய்வீக வழிபாடு இதனை போக்கும் .குடம்பத்தோடு ஆன்மிக சுற்றலா செல்ல வாய்ப்பு கிட்டும் .சுக்கிரன் சாரத்தில் சஞ்சரிக்கும் போது தன வரவு அதிகரிக்கும் .வாகனம் அல்லது நிலம் மூலமாக பண வரவு உண்டு .சூரியன் சாரத்தில் இருக்கும் போது உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும் .கொடுத்த வாக்கினை நிறைவேற்றுவீர் .உங்கள் சுய  ஜாதகத்தில் குரு இருக்கும் நிலை அறிந்து அதற்குரிய பரிகாரங்களை செய்யுங்கள் நன்மையை தரும் .


முருகனை வழிபடுவதன் மூலம் தித்திக்கும் வாழ்வை பெறுவீர் .


சிம்மம் :

         "ஜென்ம ராமர் வனத்தினிலே "  என்பது பழமொழி .

இதுவரை விரய ஸ்தானத்தில் சஞ்சரித்த குரு பகவான் ஜூலை 6 முதல் உங்கள் ஜென்ம ராசியில் ப்ரேவசிக்கிறார் .அங்கிருந்து 1,5 மற்றும் 7 ஆகிய இடங்களை பார்க்கிறார் . மனைவி மற்றும் பிள்ளைகள் வழி உறவு மகிழ்ச்சியை தரும் .ஆன்மீக சிந்தனை மேலோங்கும் .வியாபாரம் நன்றாக அமையும் .திருமணம் நடைபெறதாவர்களுக்கு கோசார ரீதியாக திருமணம் நடைபெருவதுற்கு வாய்ப்புண்டு .திருமணம் ஆகி பிரிந்தவர்கள் ஒன்றினணவர் .வாரிசு இல்லாதவர்களுக்கு வாரிசு பிறக்கும் .தந்தை வழி உறவு இனிக்கும் . உயர் கல்வி படிப்பதற்கான வாய்ப்பு கிட்டும் .அன்மீக பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்பு கிடைக்கும் .ஜென்ம ராசியில் குரு சஞ்சரித்தாலும் அவரின் பார்வை பதியும் இடங்கள் நன்மையை தரும் .

குரு கேதுவின் சாரத்தில் சஞ்சரிக்கும் போது அலைச்சல் கூடும் .உடல் நல குறைவுகள் ஏற்பட கூடும் .சுக்கிரன் சாரத்தில் இருக்கும் போது தொழில் அல்லது அலுவலக வேலை காரணமாக சிறு  பயணம் செல்ல நேரலாம் .இளைய சகோதரருடன் நல்லுறவு ஏற்படும் .தன்னம்பிக்கை அதிகரிக்கும் .குரு சூரியன் சாரத்தில் சஞ்சரிக்கும் போது உங்களுக்கு சாதகமான காலமிது .தங்கள் மன எண்ணங்கள் நிறைவேறும் .உங்கள் சுய  ஜாதகத்தில் குரு இருக்கும் நிலை அறிந்து அதற்குரிய பரிகாரங்களை செய்யுங்கள் நன்மையை தரும் .


நல்வாழ்வை பெற குரு தட்சணாமூர்த்தியை வழிபடுங்கள் .


கன்னி :

"இடமது பன்னிரெண்டில் இயல்பாகக் குருவும் வந்தால் கடமையில் கவனம்  தேவை !காசுகள் விரயம் ஆகும் !உடமையாய் சொத்து சேரும் !உடல் நலம் அச்சுறுத்தும் தடம்புரளாமல் வாழத்தைரியம் கைகொடுக்கும் "என்கிறது ஜோதிடம் .

இதுவரை லாப ஸ்தானத்திலிருந்த குரு பகவான் ஜூலை 6 முதல் 12ல் சஞ்சரிக்கிறார் .அங்கிருந்து 6,8,10 ஆகிய இடங்களை பார்வையிடுகிறார் .6ம் இடத்தில் அவர் பார்வை படுவதால் சத்ருகளின் பலம் குறையும் .உடல் உபாதைகள் நீங்கும் .இருப்பினும் 12ல் குரு உள்ளதால் உடல் நலத்தில் கவனம் தேவை .சுப விரயம் ஏற்படும் .10ல் குரு பார்வை பதிவதால் உத்தியோகத்தில் உயர்வு ஏற்படும் .தொழிலில் மேழோங்கும்  .கடன் தொல்லைகள் தீரும் .7ல் உள்ள கேதுவால் கணவன் மனைவியிடையே சண்டை சச்சரவுகள் இருக்கும் .ராசியில் உள்ள ராகுவினால் சற்று நிதானத்துடன் இருப்பது நல்லது .இதில் இருந்து விடுபட அன்னை துர்கை வழிபாடு செய்யுங்கள் நன்மை தரும் .

குரு கேதுவின் சாரத்தில் இருக்கும் போது மனைவி வழியில் விரயம் ஏற்படும் .வியாபாரத்தில் விரயம் ஏற்படும் .வீடு அல்லது வாகனம் வாங்க நேரலாம் .சுக்கிரன் சாரத்தில் சஞ்சரிக்கும் போது மன தைரியம் கூடும் .தொழிலில் சிறு பிரச்சனைகள் நேரலாம் .குரு சூரியனின் சாரத்தில் இருக்கும் போது உடல் நலத்தில் எதாவது குறைகள் ஏற்படும் .வீண் விரயங்கள் ஏற்படும் .உங்கள் சுய  ஜாதகத்தில் குரு இருக்கும் நிலை அறிந்து அதற்குரிய பரிகாரங்களை செய்யுங்கள் நன்மையை தரும் .

விநாயகனை வழிபடுவதன் மூலம் உன்னதமான பலன்களை பெறுவீர் .


துலாம் :

"பதினோராம் இடத்தில்  வந்து பார்த்திடும் குருதான் நின்றால் ,மதிப்பான வாழ்க்கை சேரும் !மகிழ்ச்சியும் நிலைத்திருக்கும் !துதிக்கின்ற தெய்வம் தன்னை ,துணையாக்கி பார்த்திருந்தால் ,விதிகூட மாறிப் போகும் !வெற்றிகளும் நாளும் சேரும் !"

என்கிறது ஜோதிடம் .

இதுவரை 10ல் சஞ்சரித்து வந்த குரு பகவன் ஜூலை 6முதல் 11ல் (லாப ஸ்தானத்தில் ) சஞ்சரிக்க இருக்கின்றார் .அங்கிருந்து அவர் 3,5,7 ஆகிய இடங்களை பார்வையிடுகிறார் .அவர் பார்வை இவ்விடங்களில் பதிவதால் தன்னம்பிக்கை உயரும் .வேலை மாற்றம் ஏற்படும் .பதவி உயர்வு கிட்டும் .சகோதரருடன்  ஒற்றுமை உணர்வு கூடும் .புத்திரர்கள் வழியில் நற்பலன்கள் கிட்டும் .தெய்வ சிந்தனை கூடும் .வியாபாரம் சிறக்கும் .நல்ல லாபம் கிடைக்கும் .வாழ்கையில் மதிப்பு உயரும் .மகிழ்ச்சி பெருகும் .வெற்றி ஸ்தானத்தில் உள்ள குரு பகவான் உங்களுக்கு செய்யும் செயல்களில் வெற்றியினை தந்து அருள்வார் .தெய்வீக துணையும் உங்களுக்கு துணை நிற்கும் .சனீஸ்வரனின் தாக்கத்தில் இருந்து விடுபட விநாயகனை வழிப்படுங்கள்  .

கேதுவின் சாரத்தில் குரு சஞ்சரிக்கும் போது உடல் நலத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.சுக்கிரன் சாரத்தில் குரு இருக்கும் போது உங்கள் மன எண்ணங்கள் நிறைவேறும் .இருந்தாலும் அலைச்சல் இருக்கும் .சூரியன் சாரத்தில் குரு இருக்கும் போது செய்யும் செயல்கள் அனைத்திலும் வெற்றி கிட்டும் .சகோதரர்  மற்றும் நண்பர்கள் மூலம் உதவிகள் பெறுவீர் .பணவரவு இருக்கும் .உங்கள் சுய  ஜாதகத்தில் குரு இருக்கும் நிலை அறிந்து அதற்குரிய பரிகாரங்களை செய்யுங்கள் நன்மையை தரும் .

சாஸ்தாவை வணங்குவதன் மூலம் அபரிவிதமான பயனை பெறுவீர் .

விருச்சிகம் :

"பத்தில் குரு பதவிக்கு இடர் " என்பது பழமொழி .

"இரண்டினை குருதான்  பார்த்தால் இல்லத்தில் அமைதி கூடும் !நான்கினை குருதான் பார்த்தால் நல்லதோர் சுகம் வாய்க்கும் !ஆரினை குருதான் பார்த்தால் அகிலத்தில் கடன்கள் தீரும்"

என்கிறது ஜோதிடம் .

இதுவரை 9ல் சஞ்சரித்து நற்பலன்களை வழங்கிய குரு ஜூலை 6 முதல் 10க்கு இடம் பெயர்கிறார் .அங்கிருந்து 2,4,6 ஆகிய இடங்களை பார்க்கிறார் .பொதுவாக குரு தான் இருக்கும் இடத்திற்கு எந்த வித நற்பலனையும் செய்ய மாட்டார் .ஆகவே அவர் இவ்விடத்தில் இருப்பதால் தொழிலல் மற்றும் அலுவலகத்தில் இடர்பாடுகள் நேரும் .இது பொது பலன் ஆகும் .ஒருவருடைய சுய ஜாதகத்தில்  10ம் இடத்தின் பலமறிந்து செயல்பட்டால் வேலை இழப்பு மற்றும் நஷ்டத்தை தவிர்க்கலாம் .குருவின் பார்வை பதியும் இடங்களால் இல்லத்தில் மகிழ்ச்சி இருக்கும் .உடல் நலகுறைவுகள்   விலகும் .தாய் வழியில் நன்மை உண்டு .எதிரிகள் விலகுவர் .மேலும் ஜென்ம சனியின் தாக்கத்தில் இருந்து மீள அனுமன் மற்றும் விநாயகனை வழிபட்டு வாருங்கள் .
11ல் உள்ள ராகுவால் தனவரவு உண்டு .


கேதுவின் சாரத்தில் சஞ்சரிக்கும் குரு புத்திர வழியில் மன கசப்பை ஏற்படுத்தும் .ஆன்மீக சிந்தனையின் மூலம் இதனை போக்கலாம் .சுக்கிரன் சாரத்தில் சஞ்சரிக்கும் போது வியாபாரத்தில் லாபம் மற்றும் நஷ்டம் கலந்திருக்கும் .வேலையில் கவனம் மற்றும் நிதானத்துடன் இருப்பது நல்லது .சூரியன் சாரத்தில் குரு இருக்கும் போது உத்தியோகத்தில் பதவி உயர்வி கிடைக்கும் .அரசியல் செய்வோருக்கு நற்காலம் இது .உங்கள் சுய  ஜாதகத்தில் குரு இருக்கும் நிலை அறிந்து அதற்குரிய பரிகாரங்களை செய்யுங்கள் நன்மையை தரும் .

குரு தட்சணாமூர்த்தியை வழிபட்டு உன்னத வாழ்வை பெறுங்கள் .


தனுசு :

"ஒன்பதில் குருவும் வந்தால் ஒப்பற்ற வாழ்க்கை சேரும் !பொன் பொருள் அதிகரிக்கும் !பூமியால் லாபம் கிட்டும் !நண்பர்கள் ஒத்துழைப்பால் நலம் யாவும் வந்து கூடும் !இன்பத்தின் எல்லை காண இறையருள் கைகொடுக்கும் !" 

என்கிறது ஜோதிடம் .

குரு பகவான் உங்கள் ராசிக்கு ஒன்பதாம் இடத்திற்கு ஜூலை 6ந் தேதி ப்ரேவசிகிறார் .அங்கிருந்து 1,3,5 ஆகிய இடங்களை பார்வையிடுகிறார் .ஆகையால் உங்கள் தன்னம்பிக்கை உயரும் ,செல்வாக்கு ,மதிப்பு ,மரியாதை ,கௌரவம் ஆகியவை உயரும் .சகோதரர் மற்றும் நண்பர் வழியில் 
உதவிகள் கிட்டும் .சுப காரியங்கள் யாவும் இல்லத்தில் நடைபெறும் .உத்தியோகம் மற்றும் தொழில் சிறக்கும் .எண்ணங்கள் நிறைவேறும் .கடன் 
நிவர்த்தியாகும் .பணபிரச்சனை தீர்ந்து தன வரவு இருக்கும்.தந்தை வழி உறவு அனுகூலம் தரும்  .வெளிநாடு செல்ல வாய்ப்பு கிட்டும் .சனியும் உங்கள் ராசிக்கு 2,3க்கு அதிபதியவதால் 7 1/2 சனியின் ஆதிக்கம் பெரிதளவில் இருக்காது .மேலும் 10ல் ராகு உள்ளதால் தொழிலும் சிறப்பாக அமையும் .

கேதுவின் சாரத்தில் குரு சஞ்சரிக்கும் போது வீட்டில் சிறு மகிழ்ச்சி குறைவு இருக்கும் .சிறு சஞ்சலங்கள் மட்டுமே தரும் வேறு எவ்விதத்திலும் பாதிக்காது .சுக்கிரன் சாரத்தில் சஞ்சரிக்கும் போது உடல் நலனில் கவனம் தேவை .இக்காலத்தில் பொறுமை மிகவும் அவசியம் .சூரியன் சாரத்தில் குரு சஞ்சரிக்கும் போது  தமக்கு ஆன்மிகத்தில் அதிக ஆர்வம் ஏற்படும் .வெளிநாடு அல்லது வெளியூர் செல்லும் வாய்ப்பு கிட்டும் .இது செல்வாக்கு மிக்க காலமிது உங்களுக்கு .உங்கள் சுய  ஜாதகத்தில் குரு இருக்கும் நிலை அறிந்து அதற்குரிய பரிகாரங்களை செய்யுங்கள் நன்மையை தரும் .

முருகப்  பெருமானை வழிபட்டு வாழ்வில் முன்னேறுங்கள் .

மகரம் :

"எட்டினிலே  குருதான் வந்தால் இரண்டினை பார்ப்பதாலே  பெட்டியிலே பணமும் சேரும் !பெருமையும் வந்து கூடும் !கட்டாயம் குருவை கைகூப்பி தொழுது நின்றால் ,திட்டங்கள் வெற்றியாகும் !தெய்வங்கள் துணையாய் நிற்கும் !"

என்கிறது ஜோதிடம் .

குரு உங்கள் ராசிக்கு அஷ்டமத்தில் ஜூலை 8முதல் சஞ்சரிக்க போகின்றார் .அங்கிருந்து 12,2,4 ஆகிய இடங்களை பார்வையிடுகிறார் .12ல் குரு பார்வை பதிவதால் விரயங்கள் கட்டுக்குள் வரும் சுபமாய் மாறும் .உடல் நல குறைவுகள் மறையும் .கடன் நிவர்தியடையும் .தன வரவு அதிகரிக்கும் .குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும் .தாய் வழியில் அனுகூலம் இருக்கும் .வீடு மற்றும் வாகனம் வாங்க நேரிடலாம் .ஒன்பதில் உள்ள ராகு மற்றும் குருவினால் வெளிநாடு போக வாய்ப்பு கிட்டும் .சனியும் உங்களுக்கு சாதகமான இடத்தில் தான் உள்ளார் .

கேதுவின் சாரத்தில் குரு சஞ்சரிக்கும் போது தன்னம்பிக்கை அதிகரிக்கும் .வெளியூர் செல்லும் வாய்ப்பு கிட்டும் .சுக்கிரன் சாரத்தில் குரு சஞ்சரிக்கும் போது தொட்ட செயல்களில் வெற்றி கிட்டும் .தொழில் வளர்ச்சி நன்றாக இருக்கும் .சூரியன் சாரத்தில் குரு சஞ்சரிக்கும் போது அலைச்சல் அதிகரிக்கும் உடல் நல குறைவுகள் ஏற்பட கூடும் .உங்கள் சுய  ஜாதகத்தில் குரு இருக்கும் நிலை அறிந்து அதற்குரிய பரிகாரங்நீங்கள் கும்பிட்டால் களை செய்யுங்கள் நன்மையை தரும் .

அம்மனை வெள்ளிதோறும் வழிபடுவதன் மூலம் வாழ்வில் எற்றம் காண்பீர் .

கும்பம்:

"ஏழினில் குருதான் வந்தால் எதிர்காலம் சிறப்பாய் அமையும் !வாழ்விலே வசந்தம் வந்து சேரும் !வருமானம் திருப்தி ஆகும் ! சூழ்ந்திடும் பகை விலகும் !தொடுத்திடும் மாலை சேரும் !கோள்களில் குருவை நீங்கள் கும்பிட்டால் நலம் கிடைக்கும் "

என்கிறது ஜோதிடம் .

உங்கள் ஜென்ம ராசிக்கு குரு 7ல் சஞ்சரிக்க போகின்றார் .அவர் பார்வை 11,1,3 ஆகிய இடங்களில் பதிகிறது .ஆகையினால் தொட்டது துலங்கும் .அனைத்திலும் வெற்றி கிட்டும் .மேலும் குரு உங்கள் ஜென்ம ராசிக்கு 2,11க்கு உரியவர் ஆகையினால் கணவன் அல்லது மனைவி மூலம் தன வரவு இருக்கும் .செல்வாக்கு ,மரியாதை உயரும் .தன்னம்பிக்கை உயரும் .வீட்டில் சுப நிகழ்வுகள் நடைபெறும் .உத்தியோகம் மற்றும் தொழில் சிறப்படையும் .தெய்வத்துணை உடன் இருக்கும் .குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது .தெளிவான சிந்தனை இருக்கும் .

கேதுவின் சாரத்தில் குரு இருக்கும் போது தனவரவில் சிறிது தொய்வு இருக்கும் .குடும்பத்தில் குழப்பம் இருந்தாலும் தெய்வ துணை உண்டு .சுக்கிரன் சாரத்தில் குரு சஞ்சரிக்கும் போது  தர்ம சிந்தனை மேலோங்கும் .தெய்வீக அருள் கிடைக்கும் .குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடைபெறும் .சூரியன் சாரத்தில் குரு சஞ்சரிக்கும் போது கணவன் அல்லது மனைவி வழியில் அனுகூலம் கிடைக்கும் .வியாபாரத்தில் லாபம் கிடைக்கும் .உங்கள் சுய  ஜாதகத்தில் குரு இருக்கும் நிலை அறிந்து அதற்குரிய பரிகாரங்களை செய்யுங்கள் நன்மையை தரும் .

பெருமாளை வழிபட்டு வாழ்வில் வெற்றிநடை போடுங்கள் .

மீனம் :

"தேவகுரு ஆறில் வந்தால் தேவைகள் பூர்த்தியாகும் !ஆவல்கள் தீரவேண்டின் அனுசரிப்பும் தேவையாகும் !கோபத்தை விலக்கினாள் தான் குடும்பத்தில் அமைதி கூடும் !தீபத்தில் குருவை கண்டு தரிசித்தால் நன்மை சேரும் !"

என்கிறது ஜோதிடம் .

குரு பகவான் ஜூலை 6 முதல் உங்கள் ஜென்ம ராசிக்கு 6ல் சஞ்சரிக்கவிருக்கின்றார் .அவரின் பார்வை 10,12,2ல் பதிகிறது .ஆகையினால் வியாபாரம் மற்றும் தொழில் நன்றாக இருக்கும் .வீண் விரயங்கள் தவிர்க்கப்படும் .சுப விரயங்கள் இருக்கும் .குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும் .தன வரவு இருக்கும் .ஆனாலும் குரு ஆறினில் இருப்பதால் உடல் நலம் பாதிக்கபடும் .எதிரிகளின் பலமும் சற்று கூடும் .ஆகவே பொறுமையுடன் இருப்பது நல்லது .கோபத்தை தவிர்த்து புத்தி கூர்மையுடன் செயல்பட்டால் வெற்றி கிட்டும் .ஜென்ம ராசியில் உள்ள கேது ஆழ்ந்த அறிவை தருவர் .

கேதுவின் சாரத்தில் குரு சஞ்சரிக்கும் போது அனைத்திலும் பொறுமை மற்றும் நிதானத்துடன் செயல்படுவது நன்று.உடல் நலத்தில் பாதிப்பு ஏற்பட கூடும் .சுக்கிரன் சாரத்தில் குரு இருக்கும் போது கோபத்தை கட்டுபடுதவிடில் அவப்பெயர் உண்டாகும் .உடல் நலத்தில் கவனம் தேவை .சூரியன் சாரம் குரு இருக்கும் போது  உடல் நலம் கண்டிப்பாக பாதிக்க கூடும் .மேலும் எதிரிகளின் வலு கூடும் .ஆகவே பொறுமையுடன் இருப்பது நல்லது .

வாழ்க்கையை வெல்ல அம்பாளை வெள்ளி தோறும் வழிபடுவது நன்று 




No comments:

Post a Comment