தமிழ்நாட்டில் உள்ள வைதீஸ்வரன் கோயிலில் நாடி ஜோதிடம் மிகவும் பிரபலமானது .நாடி ஜோதிடம் என்பது பழம் பெரும் மஹரிஷிகளான அகத்தியர் ,வசிஷ்டர் மற்றும் பிற ரிஷிகளால் எழுதப்பட்டது என்று கூறப்படுகிறது .சிவன்-பார்வதி உரையாடல்களும் 18 முனிவர்களால் ஓலை சுவடிகளில் எழுதப்பட்டுள்ளது என்று கூறுகிறார்கள் . இவை அனைத்தும் முனிவர்கள் தம் ஞான திருஷ்டியினால் பிற்காலத்தில் தன்னை நாடி மனிதர்கள் வருவார்கள் , அவர்கள் அவ்வாறு நாடி வரும் நேரத்தில் அவர்கள் மனதில் உள்ள கேள்விகளுக்கு உண்டான பதில்களை முனிவர்கள் தம் ஞான திருஷ்டியீன் மூலம் அறிந்து அதற்கு உண்டான பதில்களை ஓலை சுவடிகளில் பழமையான தமிழில் எழுதி வைத்துள்ளதாக கூறபடுகின்றது. ஆண்களுக்கு அவர்களின் இடது கை ரேகை மற்றும் பிறந்த தேதியை வைத்து அவர்களின் ஓலை சுவடி கண்டு பிடிக்க படுகின்றது என்றும் பெண்களுக்கு அவர்களின் வலது கை ரேகை மற்றும் பிறந்த தேதியை வைத்து அவர்களின் ஓலை சுவடி கண்டு பிடிக்க படுகின்றது .பின்னர் அவ் ஓலை சுவடிகளின் உள்ள பலன்களை நாடி ஜோதிடர்கள் படித்து கூறுகின்றனர் .
ஆனால் இப்போது பல போலி நபர்கள் பணத்திற்காக சரியான அனுபவம் இல்லாமலும் போலி ஓலை சுவடிகளை கொண்டும் பலன் உரைப்பதாகவும் கூறப்படுகின்றது .முனிவர்கள் விட்டு சென்ற அறிய பொக்கிஷமான ஓலை சுவடிகள் தவறாக பயன் படுத்த படுகின்றது என்றும் கூற படுகின்றது .இதனால் பலருக்கு நாடி ஜோதிடத்தின் மீது நம்பிக்கை இல்லாமல் போகின்றது .இவை அவ் முனிவர்களுக்கும் அவ பெயரை உண்டாக்குகின்றன.போலியான நபர்களிடம் மக்கள் ஏமாறாமல் இருக்க வேண்டும் .
மகரிஷிகள் எழுதி வைத்த நாடிகள் அணைத்தும் அழிந்து விட்டது என்றும் இன்று உள்ள நாடிகள் அனைத்தும் போலியானவை என்ற கருத்தும் நிலவுகிறது ."யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் " - என்பதற்கு இணங்க நாடி ஜோதிடத்தை பற்றி தமது கருத்தை பதிவு செய்யவும் .இதனால் பலர் போலி நாடி ஜோதிடர்களை நம்பி ஏமாறுவதை தவிர்க்கலாம் .நாடி ஜோதிடம் பற்றி தமது கருத்து மற்றும் அனுபவத்தை பதிவு செய்ய வேண்டுகின்றேன் .
No comments:
Post a Comment