Thursday, 10 December 2015

புத்தாண்டு பலன்கள் - 2016 : ரிஷபம்


                      

                                              இந்த புது வருடத்தில்  உங்கள் ராசிக்கு 8,11ம் அதிபதி ஆகிய  குரு  ஆகஸ்ட் மாதம் வரை 4ல் உள்ளார்  .4ல் உள்ள குருவினால் வாகனங்கள் மற்றும் வீடு மூலம் லாபம் உண்டு .4ல் உள்ள குரு சிறு சங்கடங்களையும் தருவார்  .தாய் தந்தை வழியில் மன வருத்தம் இருக்க கூடும் . தொழிலில் சிறு குழப்பங்கள் இருக்க கூடும் .மேற்கொண்ட செயல்களில் தீவிர முயற்ச்சிக்கு பிறகு தான்  வெற்றி கிட்டும் .உங்கள் ராசிக்கு தர்ம-கர்மாதிபதி சனி 7ல் சஞ்சரித்து அனுகூலமான பலன்களை தருகிறார்  . 7ல் உள்ள சனியினால் தொழிலில் முயற்சிக்கு ஏற்ற வெற்றி கிட்டும் .வெளியூர் பயணங்களும் செல்ல நேரிடலாம் .கணவன் மனைவி இடையே சிறு சிறு பிரச்சனைகள் இருக்கும்.தொழிலில் சனியின் தாக்கத்தை தவிர்க்க சனி கிழமை தோறும் அனுமனை வழிபடுங்கள் .ஜனவரி 8 க்கு பிறகு இதுவரை 5,11ல் இருந்த ராகு மற்றும்  கேது பகவான் 4 மற்றும் 10 ற்கு இடம் பெயர்கின்றனர் .10ல் உள்ள கேதுவினால் வேலையில் பணி சுமை கூடும்  .மற்றவர்களை காட்டிலும் அதிக பணி செய்ய நேரிடும் .4ல் உள்ள ராகுவினால் மன நிம்மதிக்கு பங்கம் உண்டாகும்  .வீடு மற்றும் வாகனம் வாங்கும் எண்ணங்கள் மேலோங்கும் .உடல் நலத்திற்கும் சிறு பாதிப்புகள் ஏற்பட கூடும் .ஆகஸ்ட் 8ல் குரு பகவான் பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார் இதனால் பூர்வ ஜென்ம பலன்களையும் அனுபவிக்க நேரிடும் .கடவுள் வழிபாட்டுக்கு தக்க பலன் கிட்டும் .5ல் சஞ்சரிக்கும் குருவினால் உன்னதமான பலன்களும் கிட்டும் .இருப்பினும் தந்தையின் உடல் நலத்தில் சிறு பாதிப்புகள் இருக்கும் .லாபங்கள் பெருகும் . மதிப்பு  மரியாதை உயரும் .
                               ஜனவரி மாத  தொடக்கத்தில்  சுக ஸ்தானாதிபதி சூரியன் 8ல் சஞ்சரிப்பதால் உடல் நலத்தில் பாதிப்பு ஏற்படலாம் .அலைச்சல் அதிகரிக்கும் .வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை . புதனின் சாதகமான போக்கினால் இனிய பலன்களும் உண்டு .கோயில் பயணங்கள் செல்ல நேரிடும் .சுக்கிரன் மற்றும் செவ்வாயின் சஞ்சாரம் கணவன் மனைவி இடையே பிரச்சனைகளை ஏற்படுத்தும் .கடன் வாங்க நேரிடலாம்.உடல் நலத்திலும் அதிக அக்கறை தேவை .மாத பிற்பாதியில்  9ல் சூரியன் சஞ்சரித்த பின் குல தெய்வ அனுகூலம் கிட்டும் .                               
                               பிப்ரவரி மாதத்தில் குடும்பத்தில் செலவுகள் அதிகரிக்கும்  .பிள்ளைகள் வழியில் உபாதைகள் ஏற்படும் .தன வரவிலும் தொய்வு இருக்கும் . 10ல் சூரியன் சஞ்சரித்த பின் சூர்ய - கேது சேர்க்கை ஏற்படுகிறது .வேலை பளு  கூடும் .அவ பெயர் ஏற்படவும் வாய்ப்பு உண்டு   .கணவன் மனைவி இடையே பிரச்சனைகள் நீடிக்கும் .                                  
                                மார்ச் மாதத்தில் ராசிநாதன் சுக்கிரன்  9ல்  சஞ்சரிப்பதால் 
தந்தைக்கு உடல் பாதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு .தாம் மேற்கொண்ட செயல்களில் சாதகமான பலன்களே கிட்டும் .அன்மீக தரிசனங்கள் உண்டு  .தொழிலில் பிரச்சனைகள் ஏற்படும்  .மாத  பிற்பாதியில் 11ல் சஞ்சரிக்கும் சூரியனால் தாய் வழி ஆதாயங்கள் இருக்கும்  .வீடு மற்றும் வாகனங்கள் வழியில் லாபம் உண்டு .
                           ஏப்ரல் மாதத்தில் சுக்கிரன் 10 ல் சஞ்சரிப்பதனால் தொழிலில் தீட்டிய திட்டங்கள் வெற்றி பெரும்.  லாபங்கள் மேலோங்கும் .குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும்  .மாத  பிற்பாதியில் 12ல்   சஞ்சரிக்கும் சூரியனால் வண்டி அல்லது வீடு வழியில் விரயம் ஏற்படும்  .வாகனத்தில் பயணம் மேற்கொள்ளும்  போது கவனத்துடன் இருப்பது நல்லது .உடல் நல குறைவும் இருக்கும் .
                            மே மாதத் தொடக்கத்தில் சூரியன் ,சுக்கிரன் மற்றும் புதன் ஆகியோர்  ராசிக்கு 12ல்  சஞ்சரிப்பதனால் விரயங்கள் உண்டு .மருத்துவ செலவு ஏற்படவும் வாய்ப்பு உண்டு .வாகன பயணத்தின் போது அதிக கவனம் தேவை . மாத பிற்பாதியில் ராசியில்  சஞ்சரிக்கும் சூரியனால் மன  மகிழ்ச்சி கூடும் .எண்ணிய காரியங்கள் தாமதமாய்  நிறைவு பெரும் .                               
                            ஜூன் மாதத்தில் சிறு  உடல் உபாதைகள் இருந்தாலும் மன நிறைவு இருக்கும்  .புத்திரர் வழியில் அனுகூலம்  இருக்காது . எந்த பிரச்சனையும் சமாளிக்க கூடிய மன தைரியம் தம்மிடம் இருக்கும் .மாத பிற்பாதியில் 2ல் சஞ்சரிக்கும் சூரியனால் தன வரவு கூடும் .குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும் ,                            
                            ஜூலை மாதத்தில் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும் குடும்பத்தில் மகிழ்ச்சி மேலும் கூடும்  .கணவன் மனைவி விட்டு கொடுத்து செல்வது நல்லது .தன வரவும் கூடும் .மாத பிற்பாதியில் 3ல் சஞ்சரிக்கும் சூரியனால் சிறு அலைச்சல்கள் இருக்கும் .தாய்க்கு உடல் நல குறைவு ஏற்பட வாய்ப்புண்டு .மன தைரியம் மற்றும் தன்னம்பிக்கை கூடும் .                                                                    ஆகஸ்ட் மாதத்தில் மேற்கொண்ட எந்த ஒரு செயலையும் தம்முடைய சாமர்த்தியத்தை கொண்டு செய்து முடிப்பீர் .மாத பிற்பாதியில் 4ல் ஆட்சி பெரும் சூரியனால் மன மகிழ்ச்சி இருக்கும்  .இருப்பினும் ராகுவின் சேர்க்கை இருப்பதினால் இந்த காலத்தில் மிக்க கவனம் தேவை  .குரு பெயர்ச்சிக்கு இதுவரை இருந்த தொழில் பிரச்சனைகள் தீர வாய்ப்புண்டு .                                            செப்டம்பர் மாதத்தில் 5ல் சஞ்சரிக்கும் சுக்கிரனால்   புத்திரர் உடல் நலத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு  .மாத பிற்பாதியில் 5ல் சஞ்சரிக்கும் சூரியனால்  அனுகூல பலன்கள் ஏற்படும் .7ல் உள்ள   செவ்வாய் -சனி  சேர்க்கையால் வியாபாரத்தில் பணம் போடும் போது நன்கு யோசித்து செய்வது நல்லது.
                             அக்டோபர் மாதத்தில் 8ல் சஞ்சரிக்கும் செவ்வாயால் உடல் நலத்தில் பாதிப்பு ஏற்பட கூடும்  .கணவன் மனைவி இடையே ஒற்றுமை கூடும்  .மாத பிற்பாதியில் 6ல் சஞ்சரிக்கும் சூரியனால்  எதிரிகளின் தொல்லை இருந்தாலும் அதனை எதிர்கொண்டு வெற்றி பெறுவீர் .வாகனத்தில் பயணம் செய்யும் போது கவனம் தேவை .
                              நவம்பர் மாதத்தில்  சுக்கிரன் 7ம் இடத்தில் சஞ்சரிப்பதால் வியாபாரத்தில் சிறு நஷ்டங்கள் ஏற்பட வாய்ப்புண்டு  .மாத பிற்பாதியில் 7ல் சூரியன் சனியுடன் சேர்வதால் உடல் நல குறைவு மற்றும் கணவன் மனைவி இடையே பிரச்சனை  ஏற்பட கூடும் .  இந்த காலத்தில் வியாபாரத்தில் மிக்க கவனமுடன் இருப்பது நல்லது .கணவன் மனைவி விட்டு கொடுத்து செல்வது நல்லது .                                
                               டிசம்பர் மாதத்தில் முதல் பாதியில் கவனமுடன் இருப்பது நல்லது 9ல்  செவ்வாய்  இருப்பதால் வெளியூர் பயணம் செல்ல வாய்ப்பு கிட்டும்    .மாத பிற்பாதியில் 8ல் சூரியன் சஞ்சரிப்பதால் உடல் நலத்தில் சிறு பாதிப்புகள் இருக்கும் .சுக்கிரனின் சாதகமான போக்கால் இனிய சம்பவங்களும் இல்லத்தில் நடைபெறும் .  

பரிகாரம் :                                 


                             விநாயகனை துதிப்பதன் மூலம் தொழில் மற்றும் குடும்ப பிரச்சனைகள் விலகும் . எண்ணிய காரியங்கள் நிறைவேற சனிக்கிழமை தோறும் மாலவனாகிய திருமாலை வழிபடுங்கள் .எல்லாம் வல்ல இறைவன் தமக்கு  அணைத்து சுகங்களையும் தர  வேண்டுகிறேன் .






                           

No comments:

Post a Comment