புத்தாண்டு பலன்கள் - 2016 : சிம்மம்
இந்த புது வருடத்தில் உங்கள் ராசிக்கு பஞ்ம அஷ்டமாதிபதி ஆகிய குரு உங்கள் ராசியில் சஞ்சரிப்பதால்
மனைவி மற்றும் மக்கள் வழியில் மகிழ்ச்சி இருக்கும் .தந்தை வழியில் ஆதாயம் உண்டு .
தர்ம சிந்தனைகள் இருக்கும் . ஆண்மீகத்தில் அதிக ஈடுபாடு இருக்கும் . இருப்பினும் உடல் நலத்தில் சிறு
பாதிப்புகள் இருக்கும். சனியின் பார்வை ராசியில் இருப்பதால் மந்த தன்மை இருக்க கூடும். நான்கில் உள்ள
சனியால் தாயின் உடல் நலத்தில் பாதிப்பு
இருக்க கூடும், வாகனத்தில் செல்லும் போது
க வனமுடன் இருக்க வேண்டும். மணை வழியில் எதாவது பிரச்சனைகள் இருக்க கூடும் .மன நிம்மதி குறைவாக
இருக்க கூடும். குடும்பத்தில் சிறு பிரச்சனைகளும்
இருக்கும். தொழிலில் சிறு நஷ்டங்களை சந்திக்க வாய்ப்புண்டு. இருப்பினும் வாயு மைந்தனை
வழிபடுவதன் மூலம் பாதிப்புகளை தவிர்க்கலாம்.ஜனவரி 8 ல் இதுவரை உங்கள்
ராசிக்கு 2,8ல் சஞ்சரித்த ராகு மற்றும் கேது பகவான் ,1,7ல்
சஞ்சரிப்பர் .ராசியில் உள்ள ராகுவினால் தன்னலம் அதிகரிக்கும் . தன்னிலை மறந்து
செயல்படுவீர். இருப்பினும் குருவின் சேர்க்கையால் தீவிரம் குறையும். 7ல்
உள்ள கேதுவினால் தொழில் மந்தம் எற்படும். கண்வன் மனைவி இடையே பிரச்சனை ஏற்படும்.ஆகஸ்ட்
8 வரை கேதுவிற்க்கு குரு பார்வை உள்ளதால் பெரும் பிரச்சனை இருக்காது. ஆகஸ்ட் 8ல்
குரு 2ம் இடத்திற்க்கு பெயர்ச்சி ஆகிறார்.தன உயர்வு இருக்கும். குடும்பத்தில்
மகிழ்ச்சி அதிகரிக்கும். எதிரிகள்
தம்மிடம் பணிவர். ஜனவரி மாதத்தில் எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும். செல்வாக்கு மற்றும் சொல்வாக்கு
இருக்கும் .வெளியூர் பயணங்கள் செல்ல வாய்ப்புண்டு. உடல் நலத்தில் பாதிப்பு
இருக்கும்.தம்முடைய சாதுர்ய குணம் மேலோங்கி காணப்படும்.பணியில் அக்கறையுடன்
இருப்பது நல்லது ,இல்லையெனில் அவப்பெயர் எற்பட வாய்ப்புண்டு.விரயங்கள் இருக்கும். பிப்ரவரி மாதத்தில் உடல் உபாதைகள் ஏற்படும். தொழிலில் பிரச்சனைகள்
இருக்கும். புத்திரர் வழியில்
ஆதாயம் இருக்கும். கணவன்- மனைவி இடயே கருத்து- வேறுபாடுகள் இருக்கும்.சுப
விரயத்திற்க்கு வாய்ப்புண்டு .பணியில் ஆதாயம் உண்டு.
மார்ச் மாதத்தில் பயணம் மேர்கொள்ளும் போது கவனமுடன் இருத்தல்
வேண்டும். மன குழப்பங்கள் நிறைந்திருக்கும் .இளைய சகோதர வர்க்கதில் பிரச்சனைகள்
இருக்க கூடும். பணியில் தொடர்ந்து ஆதாயம் இருக்க கூடும். ஏப்ரல் மாதத்தில் புதிய தொழில்
வாய்ப்புகள் கிட்டும். இருப்பினும் உடல் நலத்தில் தொடர்ந்து கவலைகள் இருக்க
கூடும். தந்தை வழியில் அணுகூலம்
இருக்காது. மன குறைகள் இருக்க கூடும்.தொழிலில் தன் வரவு சீராக இருக்கும். மே மாதத்தில் தர்ம சிந்தனைகள்
அதிகரிக்கும் . ஆலயம் எழுப்பும் வாய்ப்புக்கள் கிட்டும்.வெளியுர் செல்லும் வாய்ப்புக்கள் அமையும். தந்தை வழியில் ஆதாயம்
இருக்கும்.குருமார்கள் தரிசனம் கிட்டும். ஜுன் மாதத்தில் ஜீவனம் நன்றாக இருக்கும். மேலும் வளரவும் வாய்ப்புண்டு.
தொழிலில் தம்முடைய எண்ணங்கள் அனைத்தும்
நிரைவேறும் மாதமிது.தம்முடைய தன்னம்பிக்கை பன்மடங்கு உயரும்.தன வரவு சீராக
இருந்தாலும் விரயங்களும் இருக்கும். ஜுலை மாதத்தில் எண்ணிய எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும். தன லாபம் அதிகரிக்கும்.தொழில் வளர்ச்சி அடையும் .
கீர்த்தி உண்டு . இல்ல தேவைகள் அனைத்தும் ஈடேறும் .குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
நண்பர்கள் வழியில் அணைத்து ஆதரவும்
கிட்டும். ஆகஸ்டு மாதத்தில் உடல் நலத்தில் பாதிப்பு இருக்கும்.மருத்துவ செலவு ஏர்பட வாய்ப்புண்டு .தன வரவு மற்றும்
குடும்பத்தில் மகிழ்ச்சி
இருக்கும்.பணியில் ஏதாவது பாதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு. அலைச்சலும் இருக்க கூடும். செப்டம்பர் மாதத்தில் தம்முடைய மன பலம் அதிகரிக்கும்.குடும்பத்தில் மகிழ்ச்சி நீடிக்கும் .குடும்பத்தில் தன வரவு தாரளமாக இருக்கும்.மூத்த சகோதர வழியில்
ஆதரவு கிட்டும்.வாகனத்தில் செல்லும் போது
கவனம் தேவை . அக்டோபர் மாதத்தில் குடும்பத்திநருடன்
மகிழ்ச்சியாய் அதிக நேரம் செலவிட வாய்ப்புண்டு . தேவைக்கேற்ற அலவு வரவு இருக்கும்.
ஆன்மீக பயணம் செல்ல வாய்ப்பு கிட்டும்.தேவைகள் பூர்த்தியாகும். தாய் வழியில்
ஆதாயம் உண்டு. நவம்பர் மாதத்தில் மன தைரியத்துடன்
செயல்படுவீர் .
இளய சகோதர வழியில் ஆதரவு கிட்டும்.
தாய்க்கு உடல் நல குறைவு ஏற்பட வாய்ப்புண்டு . வாகனத்தில் செல்லும் போது கவனம்
தேவை. மன குழப்பங்கள் இருக்க கூடும்.
டிசம்பர் மாதத்தில் மிக்க கவத்துடன் செயல்படுவது
நன்று .கோபத்தை தவிர்த்து நிதானத்துடன் செயல்படுவது நன்று. உடல் நலத்தில் பிரச்சனை
ஏற்பட கூடும். மன குழப்பங்கள் இருக்கும். எனினும் குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும்.
புத்திரர் வழியில் ஆதாயம் உண்டு.வீடு வழியில் எதாவது பிரச்சனை ஏர்பட வாய்ப்புண்டு.பரிகாரம்: சனிக்கிழமை தோறும் அனுமனை
வழிபடுங்கள் அர்தாஸ்டம சனியின் தாக்கம்
குறையும் .வாழ்வில் அனைத்து சுகங்களையும் பெற வியாழன் தோறும் குரு பகாவனை வழிபடுங்கள்
.தம்முடைய
வாழ்வு சிறந்திட இறைவனை வேண்டுகின்றேன்.
No comments:
Post a Comment