Saturday, 12 December 2015

புத்தாண்டு பலன்கள் - 2016 : கடகம்

                                         

                                                    இந்த 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 வரை உங்கள் ராசிக்கு 2ம் இடத்தில் குரு சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும் .தன வரவு தாராளமாக இருக்கும் .இல்லத்தில் உள்ள அனைவரின் தேவைகளும் பூர்த்தியாகும் .தொழில் முன்னேற்றம் இருக்கும் .குடும்பத்தில் உள்ளவரின் தர்ம சிந்தனையும் சீராக இருக்கும் .சனீஸ்வரர் பாக்ய ஸ்தானத்தில் இருப்பதால்  புத்திரர் வழியில் மன குறைவு இருக்க வாய்ப்புண்டு .மேற்கொண்ட செயல்களில் தடைகள் ஏற்பட வாய்ப்புண்டு .இறை துணைகொண்டு தடைகளை தகர்ப்பீர் .ஜனவரி 8க்கு பிறகு இதுவரை 3,9ல் சஞ்சரித்து வந்த ராகு மற்றும் கேது பகவான் ,2,8ல் சஞ்சரிப்பர் .2ல் உள்ள ராகுவினால் தன வரவு சீராக  இருக்கும் .இருப்பினும் சனி பார்வை இருப்பதால் குடும்பத்தில் சிறு பிரச்சனைகளும் ஏற்படும் .பண தேவைகள் பூர்த்தி ஆகும் .8ல் உள்ள கேதுவினால் அலைச்சல் அதிகரிக்கும் .தந்தைக்கு உடல் நலம் பாதிக்க வாய்ப்புண்டு  .தமக்கு கண் அல்லது வாய்  சம்பந்தப்பட்ட பிரச்சனைகளும் ஏற்படவும்  வாய்ப்புண்டு .ஆகஸ்ட் 8 குரு உங்கள் ராசிக்கு 3ம் இடத்திற்கு பெயர்ச்சி ஆகிறார் .அதன் பிறகு மேற்கொண்ட எந்த ஒரு செயலிலும் குழப்பம் இருக்க கூடும் .இருப்பினும் தம்முடைய தர்ம சிந்தனை மேலோங்கும் .

                                                          ஜனவரி மாதத்தில் வீடு வாங்கவோ அல்லது புதுபிக்கவோ வாய்ப்புண்டு .உத்தியோகத்தில் மதிப்பு மரியாதை கிட்டும் .குடும்பத்தில்  மருத்துவ செலவு ஏற்பட வாய்ப்புண்டு .நண்பர்கள் வழியில் உதவி கிட்டும் .தொழிலில் தன வரவு உண்டு .உறவுகளுடன் பகை ஏற்பட வாய்ப்புண்டு .
                                                          பிப்ரவரி மாதத்தில் தமது நாவில் உதிக்கும் வார்த்தைகளால் பகை ஏற்பட வாய்ப்புண்டு .தாய் வழியில் ஆதரவு கிட்டாது .வாகனத்தில் செல்லும் போது எச்சரிக்கை தேவை .கணவன் மனைவி இடையே ஒற்றுமை உண்டு .அவர்களால் தமக்கு செல்வமும் வரும் .மன குறைகள் இருக்கும் .
                                                          மார்ச் மாதத்தில் பாக்ய ஸ்தானத்தில் சனி-செவ்வாய் சேர்க்கை இருப்பதால்  காதல் வயப்பட வாய்ப்புண்டு .அதனால் பிரச்சனைகளும் ஏற்படலாம் .புத்திரர் வழியில் அனுகூலமற்ற செயல்களும் நடைபெற வாய்ப்புண்டு .தொழிலில் ஆதாயம் உண்டு .உடல் நலத்தில் கவனம் தேவை.
                                                          ஏப்ரல் மாதத்தில்  .குடும்பத்துடன் வெளியூற்கு இறை தரிசனம் செய்ய செல்ல வாய்ப்புண்டு .தந்தை வழியில் அதரவு கிட்டும் .குடும்பத்தில்  மகிழ்ச்சி  இருக்கும் .ஆன்மீக  சிந்தனையால் மன நிம்மதி கிட்டும்.
                                                           மே மாதத்தில் ஜீவனத்தில் ஆதாயம் உண்டு .ஜீவனத்தில் ஊதிய உயர்வு பெற வாய்ப்புண்டு .அரசு வழியில் ஆதாயம் இருக்கும் .தம்முடைய மன கனவுகள் நிறைவேறும் காலமிது .தன புழக்கம் தாரளமாக இருக்கும் .
                                                           ஜூன் மாதத்தில் எதிர்பாராத தன வரவுகள் கிட்டும் .இருந்தாலும் சுப விரயங்களும் ஏற்பட வாய்ப்புண்டு .உடல் நலம் சீராகும் .தாய் வழி ஆதரவு கிட்டும் .வீடு அல்லது வாகன வழியில் வருவாய் உண்டு .
                                                           ஜூலை மாதத்தில் மீண்டும் புது மணை வாங்கவோ  அல்லது மணை  பணிகள் தொடங்கவோ வாய்ப்புண்டு .விரய செலவுகள் குடும்பத்தில் ஏற்படும் .குடும்பத்தில் மருத்துவ செலவு ஏற்படவும் வாய்ப்புண்டு .மனதில் இனம் புரியாத கவலைகள் இருக்கும் .
                                                            ஆகஸ்ட் மாதத்தில் தம்முடைய மன எண்ணங்கள்   நிறைவேறும் .குடும்பத்தில் ஒற்றுமை இருக்கும் .தாய் மற்றும் நண்பர்கள் வழியில் அதரவு உண்டு .இருப்பினும் குரு பெயர்ச்சிக்கு பின் மன எண்ணங்களில் சிறிது சலிப்பு ஏற்படும் . எதிர்பாரத தன பெருக்கம் உண்டு .
                                                            செப்டம்பர் மாதத்தில் எதிர் மறையான மன எண்ணங்கள் தோன்றும் . தாயின் உடல் நலத்தில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு . தன வரவு சீராக இருக்கும் . தேவைகள்  அணைத்தும் பூர்த்தி  ஆகும் .பணியில் சில மறைமுக எதிர்ப்புகளும் இருக்க கூடும் .
                                                             அக்டோபர்  மாதத்தில் மன கவலைகள் அகலும் .மன மகிழ்ச்சி அதிகரிக்கும் .வாகனம் வாங்க வாய்ப்புகள் கிட்டும் .மன தைரியம் கூடும் .எந்த ஒரு செயலையும் எளிதாக செய்து முடிப்பீர் .தாய் வழி ஆதரவு கிட்டும் .
                                                              நவம்பர் மாதத்தில் குடும்பத்தில் சிறு பிரச்சனை வருவதற்கு வாய்ப்புண்டு .செவ்வாயின் சாதகமற்ற போக்கால் மன மகிழ்ச்சிக்கு பங்கம் ஏற்படும் .வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை .அஷ்டம கேதுவினால் உடல் நலத்திற்கு பாதிப்பு ஏற்படும் .மன கவலைகள் இருக்க கூடும் .
                                                               டிசம்பர் மாதத்தில் பண வரவில் மந்தம் ஏற்படும் .சேமிப்புகள் கரையும் .அடுத்தவர்களிடம்  கடுமையான வார்த்தைகள் உபயோகிப்பதை தவிர்க்கவும் . இருப்பினும் தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும் .மனைவி வழியில் ஆதாயம் உண்டு .கணவன் -மனைவி இடையே ஒற்றுமை கூடும் .

பரிகாரம் :
                          வாழ்வில் அணைத்து வசந்தகளையும் பெற்று நல வாழ்வு வாழ செவ்வாய் தோறும் ஈசன் மகன் முருகப்பெருமானை வழிபடுங்கள் .தித்திக்கும் வாழ்வினை பெற்றிட இறைவனிடம் வேண்டுகிறேன் .

  

No comments:

Post a Comment