Wednesday, 9 December 2015

புத்தாண்டு பலன்கள் - 2016 : மேஷம்

          

             இந்த புத்தாண்டின் தொடக்கத்திலே உங்கள் ராசிக்கு 9ம் அதிபதி ஆகிய குரு 5ல் சஞ்சரித்து அற்புதமான பலன்களை தருகிறார் .5ல் உள்ள குரு குடும்பத்தில் மகிழ்ச்சி ,தன லாபங்கள்,தந்தை வழியில் ஆதாயம் ,ஆன்மிகம் நாட்டம் ,புத்திரர்கள் வழியில் மகிழ்ச்சி ஆகியவற்றை நல்குவார் . அஷ்டம சனியின் தாக்கத்தையும் குருவின்  சாதகமான நிலை குறைக்கும் .இருப்பினும் அஷ்டம சனி வருடம் முழுவதும் உள்ளதால் வாகனம் மற்றும் பயணம் செய்யும் போது கவனம் தேவை .ஆகஸ்ட் 8ல் குரு பகவான் உங்கள் ராசிக்கு  6 ம் இடத்திற்கு பெயர்கிறார் .6ம் இடத்தில் சஞ்சரிக்கும் குரு 10,12 மற்றும் 2 ஆகிய ஸ்தானங்களை பார்க்கிறார் .ஆகஸ்டிற்கு பிறகு பணி மாற்றம் அல்லது பணி உயர்வு கிட்டுவதற்கான வாய்ப்பு உண்டு .சுப விரயங்கள் செய்வதினால் உடல் நலக்குறைவு  மற்றும் வீண் விரயங்களை தவிர்க்கலாம் .உடல்    நலத்தில்  கவனம் தேவை .சனியின் தாக்கத்தால் பணியில் சில பிரச்சனைகளும் குரு பெயர்சிக்கு பின் உதிக்கலாம் .அஷ்டம சனியின் தாக்கம் இருப்பதினால் சந்திராஷ்டம நாட்களில் மன உளைச்சல் இருக்கும் .ஜனவரி 8 க்கு பிறகு இதுவரை 6,12ல் இருந்த ராகு மற்றும்  கேது பகவான் 5 மற்றும் 11 ற்கு இடம் பெயர்கின்றனர் .11ல் உள்ள கேதுவினால் லாபங்கள் இருக்கும் .5ல் உள்ள ராகுவினால் புத்திரர் வழியில் சில கவலைகள் இருக்கும் .
                               ஜனவரி மாத  தொடக்கத்தில் சூர்ய - குரு பரிவர்த்தனை உள்ளதினால் ஆன்மீகத்தில்  ஆர்வம் அதிகரிக்கும் .கோயில் பயணம் செல்ல நேரிடலாம் .3,6ம் அதிபதி புதன் 10ல் சஞ்சரிப்பதால் உத்தியோகத்தில் சிறு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புண்டு .2,7 ம் அதிபதி சுக்கிரன் 8ல் சனியுடன் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் அவ பெயர் ஏற்பட வாய்ப்புண்டு .தொழில் மந்தம் இருக்கும் .ராசியாதிபதி செவ்வாய் 7ல் உள்ளதால் பயணம் செல்ல நேரிடலாம் . தொழில்  பிரச்சனைகளை சாமர்த்தியமாக சமாளிப்பிர் .10ல் சூரியன் சஞ்சரித்த பின் பணியில் ஆதாயம் உண்டு .உயர் பதவி கிடைக்க வாய்ப்புண்டு .                               பிப்ரவரி மாதத்தில் 9ல் சஞ்சரிக்கும் சுக்கிரனால் தன வரவு அதிகரிக்கும் . மனைவி மற்றும் குடும்ப வழி ஆதாயம் இருக்கும் .மாத பாதியில் 11ல் சூரியன் மற்றும் கேது சேர்க்கை இருப்பதினால் லாபங்கள் ஏற்ற இறக்கத்துடன் இருக்கும் .புத்திரர் வழி அவ பெயர் ஏற்படவும் வாய்ப்புண்டு .                                  மார்ச் மாதத்தில் ராசிநாதன் செவ்வாய் 8ல் சனியுடன் சஞ்சரிப்பதால் பல இன்னல்களை சந்திக்க நேரிடலாம் .உடல் நலத்தில் பாதிப்பு ஏற்படும் .10 ல் உள்ள சுக்கிரனால் பணி நிமித்தமாக பயணம் செல்ல வாய்ப்புண்டு .மாத  பிற்பாதியில் 12ல் சஞ்சரிக்கும் சூரியனால் புத்திரர் வழியில் சுப விரயங்கள் ஏற்படும் .குடும்பத்தில் மருத்துவ செலவும் இருக்க கூடும் .                               
                           ஏப்ரல் மாதத்தில் சுக்கிரன் 11 ல் சஞ்சரிக்கும் சுக்கிரனால் லாபங்கள் மேலோங்கும் .குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும் .இறை வழிபாட்டின் மூலம்  உடல் நல குறையினை போக்கி கொள்ளலாம் .மாத  பிற்பாதியில் ராசியில்  சஞ்சரிக்கும் சூரியனால் புத்திரர் வழியில் அனுகூலம் உண்டு .மேற்கொண்ட செயல்களில் வெற்றி கிட்டும் .குடும்பத்தில் விரயங்களும் இருக்கும் .                              
                            மே மாதத்தில் ராசியில் சஞ்சரிக்கும் சுக்கிரனால் மனைவி மற்றும் குடும்பத்தின்   மீது அன்பு கூடும் .அவர்களால் அணுகூலம் உண்டு .உடல் நலம் மற்றும்  பயணத்தில் அக்கறை தேவை .மாத பிற்பாதியில் 2ல் சஞ்சரிக்கும் சூரியனால் குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும் .பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி உண்டு .                               
                            ஜூன் மாதத்தில் 2ல் உள்ள சுக்கிரனால் மன மகிழ்ச்சி இருக்கும் .உடல் நலத்தில் பாதிப்பு  இருந்தாலும் குடும்பத்தில் மகிழ்ச்சி மேலோங்கும் .மாத பிற்பாதியில் 3ல் சஞ்சரிக்கும் சூரியனால் மன தைர்யம் மேலோங்கும் . தன்னம்பிக்கை கூடும் .சிறு பயணங்கள் செல்ல வாய்ப்புண்டு .                                 
                            ஜூலை மாதத்தில் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும் .உடல் நலத்தில் தொடர்ந்து பாதிப்புகள் இருக்கும் .கணவன் மனைவி இடையே ஒற்றுமை மேலோங்கும் .மாத பிற்பாதியில் 4ல் சஞ்சரிக்கும் சூரியனால் சிறு அலைச்சல்கள் இருக்கும் புத்திர வழி விரயங்கள் ஏற்படும் .                                  ஆகஸ்ட் மாதத்தில் சுக்கிரன் 4ல் சஞ்சரிப்பதால் வாகனம் வாங்கும் ஆசை இருந்தால் அது நிறைவேறும் .குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் .உடல் உபாதைகள் தொடர்ந்து இருக்கும் .மாத பிற்பாதியில் 5ல் சஞ்சரிக்கும் சூரியனால் எண்ணிய காரியங்கள் கைக்கூடும் .இருப்பினும் ராகுவின் சேர்க்கை இருப்பதினால் புத்திரர் வழியில் மன குறைவு இருக்க கூடும் .குரு பெயர்ச்சிக்கு பின் உடல் நலத்தில் பாதிப்பு இருந்தாலும் மருத்துவ சிகிச்சைக்கு பின் தீர வாய்ப்புண்டு .                               
                            செப்டம்பர் மாதத்தில் 6ல் சஞ்சரிக்கும் சுக்கிரனால்  கணவன் மனைவி இடையே பிரச்சனை ஏற்பட வாய்ப்புண்டு .குடும்பத்திலும் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்படும் .குரு சுக்கிர சேர்க்கை  இருப்பதினால் உடல் நலத்தில் கவனம் தேவை .மாத பிற்பாதியில் 6ல் சஞ்சரிக்கும் சூரியனால் புத்திரர் வழியில் பிரச்சனை ஏற்படும் .சிவன் - பார்வதியினை வழிபடுவதன் மூலம் மனம் நிம்மதி கிடைக்கும் .                                   
                             அக்டோபர் மாதத்தில் 7ல் சஞ்சரிக்கும் சுக்கிரனால் குடும்பத்தில் மீண்டும் மன மகிழ்ச்சி கூடும் .கணவன் மனைவி இடையே ஒற்றுமை கூடும் .9ல் சஞ்சரிக்கும் ராசிநாதன் செவ்வாயால் தெய்வ அனுகூலம் கூடும் .தந்தை வழியில் ஆதாயம் உண்டு .தெய்வ  வழிபாட்டு பயணங்கள் மேற்கொள்ள நேரிடும் .மாத பிற்பாதியில் 7ல் சஞ்சரிக்கும் சூரியனால்  வெளியூர் பயணங்கள்  போக நேரிடலாம் .                                  
                              நவம்பர் மாதத்தில்  நல்ல மற்றும் தீய பலன்  கலந்து  இருக்கும் .உடல் நலத்தில் கவனம் தேவை .ஆன்மீகத்தில் மனதை செலுத்துவதன் மூலம் வரகூடிய பிரச்சனைகளை  எளிதாக வெல்லலாம்  .மாத பிற்பாதியில் சூரியன் அஷ்டம சனியுடன் சேர்வதால் உடல் நல குறைவு மற்றும் வேறு சில பிரச்சனைகள் ஏற்பட கூடும் .செவ்வாயின் சஞ்சாரம் பிரச்சனைகளை வெல்ல உதவும் .                                     
                               டிசம்பர் மாதத்தில் முதல் பாதியில் 8ல் சூர்ய-சனி சேர்கை இருப்பதால் கவனமுடன் இருப்பது நல்லது .இருப்பினும் பாக்ய ஸ்தானத்தில் சுக்கிரன் இருப்பதால் தன வரவு மேலோங்கும் .குடும்பத்தில் மன மகிழ்ச்சி கூடும் .10ல் உள்ள செவ்வாயால் பணியில் ஏற்பட்ட இடர்கள் நீங்கும் .மாத பிற்பாதியில் 9ல் சூரியன் சஞ்சரிப்பதால் 1 மாதமாக ஏற்பட்ட பிரச்சனைகள் அனைத்தும் விலகும் .மன மகிழ்ச்சி கிட்டும்.  

பரிகாரம் :                                 
                             சனிக்கிழமை தோறும் அனுமனை வழிபடுவதன் மூலம் அஷ்டம சனியின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம் . எண்ணிய காரியங்கள் நிறைவேற ஞாயிறு தோறும்   ஈசனை வழிபடுங்கள் .மேலும் ஆகஸ்ட் மாதத்தில் இருந்து வியாழன் தோறும் குருவினை வழிபடுவதன் மூலம் தொழிலில் ஏதாவது தடைகள் இருந்தால் நீங்கும்.எல்லாம் வல்ல இறைவன் தமக்கு  அணைத்து சுகங்களையும் தர  இறைவனிடம் வேண்டுகிறேன் .

No comments:

Post a Comment