Friday, 11 December 2015

புத்தாண்டு பலன்கள் - 2016 : மிதுனம்

                                             

                                                                    இந்த புது வருடத்தில்  உங்கள் ராசிக்கு 7,10ம் அதிபதி ஆகிய  குரு  ஆகஸ்ட்-8 வரை   உங்கள் ராசிக்கு 3ம் இடமாகிய சிம்மத்தில் இருப்பார். 3ல்  உள்ள குருவினால்  புது அனுபவங்களை வாழ்க்கையில் கற்க நேரிடும் .மன குழப்பங்கள் இருக்க கூடும் .இருப்பினும் பொறுமையை கையாள்வதன் மூலம் மேற்கொண்ட அணைத்து செயல்களிலும் வெற்றி கிட்டும்.பொது சேவைகளில் ஆர்வம் கூடும் .தந்தை மற்றும் மனைவி வழியில் அனுகூலம் உண்டு .வியாபாரத்திலும் தம்முடைய திறன் மூலம் லாபம் கிட்டும் .குடும்பத்திலும் மகிழ்ச்சி உண்டு .உங்கள் ராசிக்கு 8,9ம் அதிபதி ஆகிய சனி 6ல் உள்ளார் .இதனால் சிறு சிறு உடல் உபாதைகள் இருக்க கூடும் .எதிரிகளின் பலம் குறைந்திருக்கும் .சுவை ஆதாரங்களில் நாட்டம் இருக்காது .இருப்பினும் மந்தன் ஆறில் இருப்பதால் பணியில் கவனமுடன் செயல்படுவது நன்று .இல்லை எனில் அவ பெயர் ஏற்பட வாய்ப்புண்டு.ஜனவரி 8 க்கு பிறகு இதுவரை 4,10ல் இருந்த ராகு மற்றும்  கேது பகவான் 3 மற்றும் 9க்கு  இடம் பெயர்கின்றனர் . 3ல் உள்ள ராகு பகவானால் சுய நல எண்ணங்கள் மேலோங்கும்.உங்களின் செயல்களால் அடுத்தவர்கள் பாதிக்க வாய்ப்புண்டு .மேலும் 9ல் உள்ள கேது பகவானால் ஆன்மிக எண்ணங்கள் மேலோங்கும் .தம் தர்ம எண்ணங்கள் மேலோங்கும் .இருப்பினும் தந்தை வழியில் வருத்தம் இருக்கும் .ஆகஸ்ட் 8 க்கு பிறகு  3ல் சஞ்சரித்து சில சங்கடங்களை கொடுத்த குரு பகவான் 4ல் சஞ்சரித்து மன மகிழ்ச்சியை அதிகரிப்பார்.வீடு அல்லது வாகனம் வாங்க வாய்ப்புண்டு .வியாபாரம் மற்றும் பணியில் லாபங்கள் இருக்கும் .


                               ஜனவரி மாத தொடக்கத்தில் உங்கள் ராசிக்கு 3ம் அதிபதி ஆகிய சூரியன் 7ம் இடத்தில் இருப்பதால் வாழ்க்கை துணை மூலம் நற்பலன் கிட்டும் .தொழில் மற்றும் பணியில் தன்னம்பிக்கையுடன் செயல் படுவிர். மேலும் செவ்வாய் பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் சிறு பிரச்சனைகளும் ஏற்பட வாய்ப்புண்டு .இருப்பினும் நண்பர்கள் மற்றும் மூத்த சகதோர/சகோதரி வழியில் அனுகூலம் உண்டு .புத்திரர் வழியில் மன குறைவு இருக்கும் .உடல் நலத்திலும் சிறு பாதிப்பு இருக்கும் .
                                     பிப்ரவரி மாதத்தில் சூரியன் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உங்கள் தன்னம்பிக்கை குறையும் .இளைய சகோதர/சகோதரி வழியில் சில மன கசப்பு இருக்க கூடும் . சுக்கிரன் மற்றும் புதன் சாதகமான போக்கினால் மனைவி வழியில் இனிய பலன்கள் இருக்க கூடும் .வியாபாரத்தில்  நல்ல வளர்ச்சி  இருக்கும் .சிறு சிறு மன கவலைகள் இருக்கக கூடும்.
                                   மார்ச் மாதத்தில் சூரியன் 9ல் சஞ்சரிப்பதால் தெய்வீக சிந்தனைகள் மேலோங்கும் .தர்ம சிந்தனைகள் இருக்கும் .மேலும் இந்த மாதத்தில் ராசியாதிபதி மற்றும் பாக்யதிபதி அஷ்டமத்தில் சஞ்சரிப்பதால் மன சங்கடங்கள் இருக்கும் .மேற்கொள்ளும் செயல்களில் இழுபறி இருக்கும் .உடல் நலம் பாதிக்கவும் வாய்ப்பு உண்டு .6ல் செவ்வாய் -சனி சேர்க்கை ஏற்படுவதால் எதிரிகளால் இன்னல்களை சந்திக்க நேரிடும் .ஆகவே கவனமுடன் இருப்பது நல்லது .தொழிலில் பிரச்சனை ஏற்படவும் வாய்ப்பு உண்டு .
                              ஏப்ரல் மாதத்தில் ஆலய வழிபாடு செய்ய வாய்ப்பு கிட்டும் .தொழியில் மேன்மை கிட்டும் .பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வு கிட்ட வாய்ப்பு உண்டு .இருப்பினும் சூர்ய-சனி சேர்க்கை 6ல் தொடர்ந்து உள்ளதால் சற்று கவனமுடன் இருப்பது நல்லது .தந்தை மற்றும் ஆன்மிக வழியில் விரய செலவு ஏற்படவும் வாய்ப்புண்டு .புதனின் சாதகமான போக்கால் எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும் .
                                    மே மாதத்தில் 11ல் ராசிக்கு சுப கிரகங்கள் சேர்கை பெறுவதனால் செய்யும் அணைத்து செயல்களிலும் கீர்த்தி   உண்டு . இருப்பினும் சிறு தடங்கல்களும் இருக்கும் .குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும் .மன நிறைவும்   இருக்கும் . தொழிலில் நல்ல வளர்ச்சி இருக்கும் . லாபங்கள் இருக்கும்
                                     ஜூன் மாதத்தில் தன வரவு  இருந்தாலும் விரயங்களும் இருக்கும் .தன்னம்பிக்கையில் தொய்வு ஏற்படும் .இளைய சகோதர வழியில் மன கவலை  ஏற்படும் .சத்ருகளால் தொடர்ந்து தொழிலில் பாதிப்பு இருக்கும் .மருத்துவ செலவுகள் ஏற்பட வாய்ப்புண்டு .
                             ஜூலை மாதத்தில்  மன கவலைகள் அனைத்தும் தீர வாய்ப்புண்டு .தம்முடைய அறிவு திறனால் எந்த ஒரு செயலையும் சாதிக்கும் வல்லமை பெறுவீர் .இருப்பினும் புத்திரர் வழியில் மன வருத்தம் மற்றும் அனுகூலமற்ற செயல் நடைபெற வாய்ப்புண்டு .
                              ஆகஸ்ட் மாதத்தில் தொழிலில் நண்பர்கள் மீது கவனம் தேவை ஏமாற வாய்ப்புண்டு .சற்று கவனத்துடன் இருப்பது நல்லது .தம் செயலால் தமக்கே மனம் வருத்தம் ஏற்படும் .சகோதர மார்க்கத்தில் பிரச்சனைகளோ அல்லது விரயமோ ஏற்பட கூடும் .தன புழக்கம் சீராக இருக்கும் .குடும்பத்திலும் மகிழ்ச்சி நிலைக்கும் . குரு பெயர்ச்சிக்கு பின் பல நன்மைகள் வந்து சேரும் .
                              செப்டம்பர் மாதத்தில் இளைய சகோதர வழியில் மகிழ்ச்சி  இருக்கும் .தம்முடைய பலம் பன்மடங்கு உயரும் .தாய்க்கு மருத்துவ செலவு ஏற்பட வாய்ப்புண்டு .தொழிலில் தொடர்ந்து பிரச்சனைகள் இருக்க வாய்ப்புண்டு .இருப்பினும் வரும் பிரச்சனைகளை உடைத்தெறியும் சக்தியை தாம் பெற்று இருப்பீர்                              
                                 அக்டோபர் மாதத்தில் தாய்க்கு தொடர்ந்து உடல் நல பாதிப்புகள் இருக்கும் .வாகனத்தில் செல்லும்  போது கவனம் தேவை .உடல் நலத்திலும் பாதிப்பு இருக்க கூடும் .மன சஞ்சலங்கள் இருக்க கூடும் .இருப்பினும் புத்திரர் வழியில் மன மகழ்ச்சி இருக்கும் .அனைத்து கவலைகளையும் எதிர்கொள்ளும் திறனும் தம்மிடத்தில் உண்டு .கணவன் மனைவி இடையே பிளவு ஏற்பட வாய்ப்புண்டு .தொழிலிலும் நஷ்டம் ஏற்பட வாய்ப்புண்டு .
                             நவம்பர் மாதத்தில் புத்திரர் வழியில் தொடர்ந்து நிறைகளும் - குறைகளும் கலந்து இருக்கும் .கணவன் மனைவி இடையே தொடர்ந்து பிரச்சனைகள் இருக்க கூடும் .தொழிலிலும் தொடர்ந்து பிரச்சனைகள் இருக்க கூடும் .தம்முடைய மன தைரியமே தமக்கு பலமாகும் .இருப்பினும் குருவின் சாதகமான போக்கால் இப்பிரச்சனைகளை வெல்வீர் .
                              டிசம்பர் மாதத்தில் பகைவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் .தம் செயலால் பல பிரச்சனைகளால்  சந்திக்க வாய்ப்புண்டு .கணவன் மனைவி இடையே இருந்த பிரச்சனைகள் தீரும் .தன வரவு பெருகும் .மன மகிழ்ச்சி கூடும் .குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும் .உடல் நல குறைபாடுகள் ஏற்பட வாய்ப்புண்டு .6ல் சூர்ய -சனி சேர்க்கை ஏற்படுவதால் எதிரிகள் மற்றும் உடல் நலத்தில்  மிக்க கவனமுடன் இருப்பது நல்லது .

பரிகாரம் :
                       பணியில் ஏற்படும் இடர்களை தவிர்க்க சனிகிழமை தோறும் சனி ஈஸ்வர பகவானுக்கு எள் தீபம் ஏற்றுங்கள் .வாழ்கையில் எண்ணிய எண்ணங்கள் நிறைவேற வெள்ளிகிழமை  தோறும் அம்மனை வழிபடுங்கள் .மேலும் வாழ்க்கையில் பாக்யங்கள் அனைத்தயும் பெற ஞாயிறு தோறும் ஈசனை வழிபடுங்கள் .வாழ்வில் இன்பங்கள் அனைத்தும் பெற்று பெரு வாழ்வு வாழ இறைவனை வேண்டுகிறேன் .

1 comment:

  1. Slots and Table Games Near Me | Mapyro
    The 서산 출장마사지 Mapyro 부산광역 출장샵 has more than 700 slots, 용인 출장샵 52 table 구리 출장안마 games and more than 200 광주 출장마사지 table games. There are over 1400 table games available, including blackjack, roulette, craps,

    ReplyDelete