Free Tamil Astrology and numerology service .Various Religious thoughts,belief and their truth will be revealed ,proving the famous saying everyone are worshipping the same god in various forms.True spiritual knowledge will be provided.The origin and science behind astrology will be revealed.The various practices followed by siddhas and the great people will be brought before you.
Sunday, 13 December 2015
Saturday, 12 December 2015
புத்தாண்டு பலன்கள் - 2016 : கடகம்
இந்த 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 வரை உங்கள் ராசிக்கு 2ம் இடத்தில் குரு சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும் .தன வரவு தாராளமாக இருக்கும் .இல்லத்தில் உள்ள அனைவரின் தேவைகளும் பூர்த்தியாகும் .தொழில் முன்னேற்றம் இருக்கும் .குடும்பத்தில் உள்ளவரின் தர்ம சிந்தனையும் சீராக இருக்கும் .சனீஸ்வரர் பாக்ய ஸ்தானத்தில் இருப்பதால் புத்திரர் வழியில் மன குறைவு இருக்க வாய்ப்புண்டு .மேற்கொண்ட செயல்களில் தடைகள் ஏற்பட வாய்ப்புண்டு .இறை துணைகொண்டு தடைகளை தகர்ப்பீர் .ஜனவரி 8க்கு பிறகு இதுவரை 3,9ல் சஞ்சரித்து வந்த ராகு மற்றும் கேது பகவான் ,2,8ல் சஞ்சரிப்பர் .2ல் உள்ள ராகுவினால் தன வரவு சீராக இருக்கும் .இருப்பினும் சனி பார்வை இருப்பதால் குடும்பத்தில் சிறு பிரச்சனைகளும் ஏற்படும் .பண தேவைகள் பூர்த்தி ஆகும் .8ல் உள்ள கேதுவினால் அலைச்சல் அதிகரிக்கும் .தந்தைக்கு உடல் நலம் பாதிக்க வாய்ப்புண்டு .தமக்கு கண் அல்லது வாய் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளும் ஏற்படவும் வாய்ப்புண்டு .ஆகஸ்ட் 8 குரு உங்கள் ராசிக்கு 3ம் இடத்திற்கு பெயர்ச்சி ஆகிறார் .அதன் பிறகு மேற்கொண்ட எந்த ஒரு செயலிலும் குழப்பம் இருக்க கூடும் .இருப்பினும் தம்முடைய தர்ம சிந்தனை மேலோங்கும் .
Friday, 11 December 2015
புத்தாண்டு பலன்கள் - 2016 : மிதுனம்
இந்த புது வருடத்தில் உங்கள் ராசிக்கு 7,10ம் அதிபதி ஆகிய குரு ஆகஸ்ட்-8 வரை உங்கள் ராசிக்கு 3ம் இடமாகிய சிம்மத்தில் இருப்பார். 3ல் உள்ள குருவினால் புது அனுபவங்களை வாழ்க்கையில் கற்க நேரிடும் .மன குழப்பங்கள் இருக்க கூடும் .இருப்பினும் பொறுமையை கையாள்வதன் மூலம் மேற்கொண்ட அணைத்து செயல்களிலும் வெற்றி கிட்டும்.பொது சேவைகளில் ஆர்வம் கூடும் .தந்தை மற்றும் மனைவி வழியில் அனுகூலம் உண்டு .வியாபாரத்திலும் தம்முடைய திறன் மூலம் லாபம் கிட்டும் .குடும்பத்திலும் மகிழ்ச்சி உண்டு .உங்கள் ராசிக்கு 8,9ம் அதிபதி ஆகிய சனி 6ல் உள்ளார் .இதனால் சிறு சிறு உடல் உபாதைகள் இருக்க கூடும் .எதிரிகளின் பலம் குறைந்திருக்கும் .சுவை ஆதாரங்களில் நாட்டம் இருக்காது .இருப்பினும் மந்தன் ஆறில் இருப்பதால் பணியில் கவனமுடன் செயல்படுவது நன்று .இல்லை எனில் அவ பெயர் ஏற்பட வாய்ப்புண்டு.ஜனவரி 8 க்கு பிறகு இதுவரை 4,10ல் இருந்த ராகு மற்றும் கேது பகவான் 3 மற்றும் 9க்கு இடம் பெயர்கின்றனர் . 3ல் உள்ள ராகு பகவானால் சுய நல எண்ணங்கள் மேலோங்கும்.உங்களின் செயல்களால் அடுத்தவர்கள் பாதிக்க வாய்ப்புண்டு .மேலும் 9ல் உள்ள கேது பகவானால் ஆன்மிக எண்ணங்கள் மேலோங்கும் .தம் தர்ம எண்ணங்கள் மேலோங்கும் .இருப்பினும் தந்தை வழியில் வருத்தம் இருக்கும் .ஆகஸ்ட் 8 க்கு பிறகு 3ல் சஞ்சரித்து சில சங்கடங்களை கொடுத்த குரு பகவான் 4ல் சஞ்சரித்து மன மகிழ்ச்சியை அதிகரிப்பார்.வீடு அல்லது வாகனம் வாங்க வாய்ப்புண்டு .வியாபாரம் மற்றும் பணியில் லாபங்கள் இருக்கும் .
Thursday, 10 December 2015
புத்தாண்டு பலன்கள் - 2016 : ரிஷபம்
இந்த புது வருடத்தில் உங்கள் ராசிக்கு 8,11ம் அதிபதி ஆகிய குரு ஆகஸ்ட் மாதம் வரை 4ல் உள்ளார் .4ல் உள்ள குருவினால் வாகனங்கள் மற்றும் வீடு மூலம் லாபம் உண்டு .4ல் உள்ள குரு சிறு சங்கடங்களையும் தருவார் .தாய் தந்தை வழியில் மன வருத்தம் இருக்க கூடும் . தொழிலில் சிறு குழப்பங்கள் இருக்க கூடும் .மேற்கொண்ட செயல்களில் தீவிர முயற்ச்சிக்கு பிறகு தான் வெற்றி கிட்டும் .உங்கள் ராசிக்கு தர்ம-கர்மாதிபதி சனி 7ல் சஞ்சரித்து அனுகூலமான பலன்களை தருகிறார் . 7ல் உள்ள சனியினால் தொழிலில் முயற்சிக்கு ஏற்ற வெற்றி கிட்டும் .வெளியூர் பயணங்களும் செல்ல நேரிடலாம் .கணவன் மனைவி இடையே சிறு சிறு பிரச்சனைகள் இருக்கும்.தொழிலில் சனியின் தாக்கத்தை தவிர்க்க சனி கிழமை தோறும் அனுமனை வழிபடுங்கள் .ஜனவரி 8 க்கு பிறகு இதுவரை 5,11ல் இருந்த ராகு மற்றும் கேது பகவான் 4 மற்றும் 10 ற்கு இடம் பெயர்கின்றனர் .10ல் உள்ள கேதுவினால் வேலையில் பணி சுமை கூடும் .மற்றவர்களை காட்டிலும் அதிக பணி செய்ய நேரிடும் .4ல் உள்ள ராகுவினால் மன நிம்மதிக்கு பங்கம் உண்டாகும் .வீடு மற்றும் வாகனம் வாங்கும் எண்ணங்கள் மேலோங்கும் .உடல் நலத்திற்கும் சிறு பாதிப்புகள் ஏற்பட கூடும் .ஆகஸ்ட் 8ல் குரு பகவான் பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார் இதனால் பூர்வ ஜென்ம பலன்களையும் அனுபவிக்க நேரிடும் .கடவுள் வழிபாட்டுக்கு தக்க பலன் கிட்டும் .5ல் சஞ்சரிக்கும் குருவினால் உன்னதமான பலன்களும் கிட்டும் .இருப்பினும் தந்தையின் உடல் நலத்தில் சிறு பாதிப்புகள் இருக்கும் .லாபங்கள் பெருகும் . மதிப்பு மரியாதை உயரும் .
Wednesday, 9 December 2015
புத்தாண்டு பலன்கள் - 2016 : மேஷம்
இந்த புத்தாண்டின் தொடக்கத்திலே உங்கள் ராசிக்கு 9ம் அதிபதி ஆகிய குரு 5ல் சஞ்சரித்து அற்புதமான பலன்களை தருகிறார் .5ல் உள்ள குரு குடும்பத்தில் மகிழ்ச்சி ,தன லாபங்கள்,தந்தை வழியில் ஆதாயம் ,ஆன்மிகம் நாட்டம் ,புத்திரர்கள் வழியில் மகிழ்ச்சி ஆகியவற்றை நல்குவார் . அஷ்டம சனியின் தாக்கத்தையும் குருவின் சாதகமான நிலை குறைக்கும் .இருப்பினும் அஷ்டம சனி வருடம் முழுவதும் உள்ளதால் வாகனம் மற்றும் பயணம் செய்யும் போது கவனம் தேவை .ஆகஸ்ட் 8ல் குரு பகவான் உங்கள் ராசிக்கு 6 ம் இடத்திற்கு பெயர்கிறார் .6ம் இடத்தில் சஞ்சரிக்கும் குரு 10,12 மற்றும் 2 ஆகிய ஸ்தானங்களை பார்க்கிறார் .ஆகஸ்டிற்கு பிறகு பணி மாற்றம் அல்லது பணி உயர்வு கிட்டுவதற்கான வாய்ப்பு உண்டு .சுப விரயங்கள் செய்வதினால் உடல் நலக்குறைவு மற்றும் வீண் விரயங்களை தவிர்க்கலாம் .உடல் நலத்தில் கவனம் தேவை .சனியின் தாக்கத்தால் பணியில் சில பிரச்சனைகளும் குரு பெயர்சிக்கு பின் உதிக்கலாம் .அஷ்டம சனியின் தாக்கம் இருப்பதினால் சந்திராஷ்டம நாட்களில் மன உளைச்சல் இருக்கும் .ஜனவரி 8 க்கு பிறகு இதுவரை 6,12ல் இருந்த ராகு மற்றும் கேது பகவான் 5 மற்றும் 11 ற்கு இடம் பெயர்கின்றனர் .11ல் உள்ள கேதுவினால் லாபங்கள் இருக்கும் .5ல் உள்ள ராகுவினால் புத்திரர் வழியில் சில கவலைகள் இருக்கும் .
Tuesday, 8 December 2015
நாடி ஜோதிடம்
தமிழ்நாட்டில் உள்ள வைதீஸ்வரன் கோயிலில் நாடி ஜோதிடம் மிகவும் பிரபலமானது .நாடி ஜோதிடம் என்பது பழம் பெரும் மஹரிஷிகளான அகத்தியர் ,வசிஷ்டர் மற்றும் பிற ரிஷிகளால் எழுதப்பட்டது என்று கூறப்படுகிறது .சிவன்-பார்வதி உரையாடல்களும் 18 முனிவர்களால் ஓலை சுவடிகளில் எழுதப்பட்டுள்ளது என்று கூறுகிறார்கள் . இவை அனைத்தும் முனிவர்கள் தம் ஞான திருஷ்டியினால் பிற்காலத்தில் தன்னை நாடி மனிதர்கள் வருவார்கள் , அவர்கள் அவ்வாறு நாடி வரும் நேரத்தில் அவர்கள் மனதில் உள்ள கேள்விகளுக்கு உண்டான பதில்களை முனிவர்கள் தம் ஞான திருஷ்டியீன் மூலம் அறிந்து அதற்கு உண்டான பதில்களை ஓலை சுவடிகளில் பழமையான தமிழில் எழுதி வைத்துள்ளதாக கூறபடுகின்றது. ஆண்களுக்கு அவர்களின் இடது கை ரேகை மற்றும் பிறந்த தேதியை வைத்து அவர்களின் ஓலை சுவடி கண்டு பிடிக்க படுகின்றது என்றும் பெண்களுக்கு அவர்களின் வலது கை ரேகை மற்றும் பிறந்த தேதியை வைத்து அவர்களின் ஓலை சுவடி கண்டு பிடிக்க படுகின்றது .பின்னர் அவ் ஓலை சுவடிகளின் உள்ள பலன்களை நாடி ஜோதிடர்கள் படித்து கூறுகின்றனர் .
ஆனால் இப்போது பல போலி நபர்கள் பணத்திற்காக சரியான அனுபவம் இல்லாமலும் போலி ஓலை சுவடிகளை கொண்டும் பலன் உரைப்பதாகவும் கூறப்படுகின்றது .முனிவர்கள் விட்டு சென்ற அறிய பொக்கிஷமான ஓலை சுவடிகள் தவறாக பயன் படுத்த படுகின்றது என்றும் கூற படுகின்றது .இதனால் பலருக்கு நாடி ஜோதிடத்தின் மீது நம்பிக்கை இல்லாமல் போகின்றது .இவை அவ் முனிவர்களுக்கும் அவ பெயரை உண்டாக்குகின்றன.போலியான நபர்களிடம் மக்கள் ஏமாறாமல் இருக்க வேண்டும் .
மகரிஷிகள் எழுதி வைத்த நாடிகள் அணைத்தும் அழிந்து விட்டது என்றும் இன்று உள்ள நாடிகள் அனைத்தும் போலியானவை என்ற கருத்தும் நிலவுகிறது ."யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் " - என்பதற்கு இணங்க நாடி ஜோதிடத்தை பற்றி தமது கருத்தை பதிவு செய்யவும் .இதனால் பலர் போலி நாடி ஜோதிடர்களை நம்பி ஏமாறுவதை தவிர்க்கலாம் .நாடி ஜோதிடம் பற்றி தமது கருத்து மற்றும் அனுபவத்தை பதிவு செய்ய வேண்டுகின்றேன் .
Subscribe to:
Posts (Atom)